அடிக்கடி கேட்கப்படுகின்ற வினாக்கள்

 
1. குடியகழ்வு படி
1.1 படியினை பெறுவதற்கு தகுதிபெற்றவர் யார்?
 
 • வளர்ந்த தனிநபர் (18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர்), எவரொருவர் வேறு நாட்டில் நிரந்தர வதிவிடம் (PR) பெற்றாரோ அவரால் பெற முடியும்.
1.2 படியாக எவ்வளவு பணத்தினை பெற முடியும்?
 
 • வளர்ந்த தனிநபருக்கு ஆரம்ப படியாக USD 150,000
 • வளர்ந்த தனிநபருக்கு வருடாந்த படியாக USD 20,000 (ஆரம்ப படியினை உபயோகித்து 12 மாதங்கள் கடந்த பிறகே வருடாந்த படியினை பெற முடியும்)
1.3 எவை படியில் அடங்கியுள்ளன?
 
 • அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் கிடைத்த தொகை
 • உருவச் சொத்துக்கள் மற்றும் அருவச் சொத்துக்கள் மூலம் கிடைத்த தொகை
 • பெற்றோரிடம் மற்றும் வாழ்க்கைத்துணையிடம் இருந்து கிடைத்த பரிசில்கள்
 • விலை உயர்ந்த கற்கள், விலை உயர்ந்த உலோகங்கள், சொந்த நகைகள் போன்ற சொத்துக்கள் மூலம் கிடைக்கக்கூடியன.
1.4 முழு படியினையும் வேறுவேறு நாட்டிற்குச் சென்று குடியேறுபவர் ஒரே தடவையில் மாற்ற/ பயன்படுத்த வேண்டமா?
 
 • இல்லை முழு படியும் முடியும் வரை சிறு தொகைகளாக பாவிக்க முடியும்.
1.5 செலாவணி கட்டுப்பாட்டாளரிடம் இலங்கைக்கு வெளியில் படியினை அனுப்புவதற்கு முன் அனுமதியினை பெற வேண்டுமா?
 
1.5.1 12 யூன் 2013இல் அல்லது அதற்கு பின்பு PR பெற்றோர்
 • முன் அனுமதி தேவையில்லை
 • இலங்கையில் உள்ள எந்த அனுமதிக்கப்பட்ட வர்த்தக வங்கியினூடாகவும் இந்த படியினை பெற முடியும்.
 • புலம்பெயர்ந்தோரின் பெயரில் திறக்கப்பட்ட புலம்பெயர்ந்தோர் தடுத்துவைக்கப்பட்ட கணக்கின் (MBA) மூலமாகவே இந்த நிதி மாற்றப்பட வேண்டும்.
1.5.2 12 யூன் 2013ற்கு முன் PR பெற்றோர்
 • செலாவணி கட்டப்பாட்டாளரிடம் இருந்து முன் அனுமதி தேவை
 • வதிவற்றோர் தடுத்துவைக்கப்பட்ட கணக்கின் மூலமாகத்தான் இவ் நிதி மாற்றப்பட வேண்டும்.
1.6 குடியகழ்வு படியினை விண்ணப்பிக்கும் பொழுது என்ன நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்? (12 யூன் 2013ற்கு முன் PR பெற்றவர்கள்)
 
i) பின்வரும் தகவல்களைக் கொண்ட கோரிக்கைக் கடிதம் ஒன்றினை செலாவணி கட்டுப்பாட்டாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
 • புலம்பெயர்ந்தவரின் பெயரம் விலாசமும்
 • புலம்பெயர்ந்தவரின் பிறந்த திகதி மற்றும் சிவில் அந்தஸ்தும்
 • புலம்பெயர்ந்தவருடன் சார்ந்த வேறு நபர்களின் பெயர் (இருந்தால்)
 • நிரந்தர வதிவிடம் (PR) பெற்ற திகதி, அதனை உறதிப்படுத்துவதற்கான ஆவணங்கள்
 • புலம்பெயர்ந்தவரின் இலங்கையிலுள்ள வங்கி கணக்கு விபரங்கள் (கணக்கு இலக்கம், வங்கி மற்றும் கிளை) மற்றும் வெளிநாட்டில் உள்ள வங்கி கணக்கு விபரங்கள் (கணக்கு இல., வங்கியின் பெயரும் விலாசமும, SWIFT இலக்கம்)
 • அற்ரோனி பத்திரத்தின் புகைப்பட பிரதி (பொருத்தம் என்றால்)
ii) கோரிக்கை கடிதத்துடன் பின்வரும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்
 • நிதியின் வளத்தின் சான்று
 • வதிவற்றோர் தடுக்கப்பட்ட கணக்கின் (NRBA) சேமிப்பின் உறுதிபடுத்தப்பட்ட கணக்கு மீதி (ஒரு NRBA கணக்கில் மட்டுமே அனுப்பவேண்டிய முழுத் தொகையும் இருக்க வேண்டும் மற்றும் நிலையான தவணைமுறை வைப்புக்கள் இவற்றிற்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது)
 • ரூபா 1,000,000/= மேற்பட்ட அனுப்புதலுக்கு உள்நாட்டு இறைவரி ஆணையாளரிடமிருந்து வரி தீர்ப்பனவு சான்றிதழ்கள்
 • சரியாக முத்திரை பதிக்கப்பட்ட பிரமாண பத்திரமும் மற்றும் சமாதான நீதிவான்/ சட்டத்தரணி நொத்தாரிசு/ சத்திய பிரமாண அதிகாரிகளின் ஆரம்ப ஒதுக்கீடு USD 150,000 அல்லது வருடாந்த ஒதுக்கீடு USD 20,000 அதிகமாக அனுப்பப்படவில்லை அல்லது அனுப்பப்பட மாட்டாது என்பதற்காக உறுதிசெய்யப்பட்ட ஆவணம். இவ்வாறு ஏதாவது நிதி மாற்றப்பட்டிருப்பின் அது தெரியப்படுத்தல் வேண்டும். (மாதிரி பிரமாணப் பத்திரம்).
 • பலம்பெயர்ந்தோர் புலம்பெயர்ந்த நேரத்திலும் அதற்கு பிறகும் பயன்படுத்தப்படும் இலங்கைக் கடவுச் சீட்டின் அனைத்து பக்கங்களின் புகைப்பட பிரதியினை சமர்ப்பித்தல் வேண்டும். விண்ணப்பதாரர் இலங்கை கடவுச் சீட்டின் பிரதியினை சமர்ப்பிக்க முடியாதிருப்பின் அதற்கான காரணத்தினை உறுதிமொழியினை சமர்ப்பித்தல் வேண்டும்.
  குறிப்பு;- விண்ணப்பதாரி யாராவது PR பெறும் நேரத்திலும் தற்பொழுதும் கொண்டுள்ள இலங்கை கடவுச்சீட்டினை சமர்ப்பிக்க முடியாது போனால் அவர்கள் USD 150,000 பெறுவதற்கு தகுதி இல்லாதவர்கள் ஆகின்றனர். (இதற்கு பதிலாக அவர்கள் வருடாந்தம் USD 20,000 மட்டும் பெறுவதற்கு தகுதி உடையவர்கள்.
1.7 தற்பொழுது கிடைக்கப்பெறும் வருமானம் புலம்பெயர்ந்தோரின் குடியகழ்வு படியின் ஒரு பகுதியாக கருதமுடியுமா?
 
 • இல்லை. புலம்பெயர்ந்தோர் படியில் இருந்து விலகி சுயாதீனமாக வட்டி, பங்கு இலாபங்கள், வாடகைகள், குத்தகை வாடகைகள் போன்றன புலம்பெயர்ந்தவருக்கு அனுப்பலாம்.
1.8 குடியகழ்வு படியினை டொலர்களாக மாற்றி இலங்கையில் புலம்பெயர்ந்தவர் சேமிக்க முடியமா?
 
 • ஆம். புலம்பெயர்ந்த ஒருவர் குடியகழ்வு படியினை அல்லது அனுப்பக்கூடிய தற்போதைய வருமானங்களை அவர்களால் இலங்கையில் பெணப்படும் வதிவற்றோர் வெளிநாட்டு நாணய (NRFC) கணக்கிற்கு மாற்ற முடியும்.
 
2. வதிவற்றோர் தடுக்கப்பட்ட கணக்கு (NRBA)
2.1 NRBA கணக்கிணை திறப்பதற்கு தகுதி உடையவர்கள் யார்?
 
 • புலம்பெயர்ந்தோர் உட்பட வதிவற்றோர் (இலங்கையில் பிறந்து அதன் பின் வேறு நாட்டில் PR பெற்றவர்கள்) மற்றும் இலங்கையல்லாதோரினாலும் NRBA இனை திறக்க முடியும்.
2.2 என்ன கணக்கு வகைகள் NRBA இன் திறக்க முடியும்?
 
 • சேமிப்பு, நடைமுறை, மற்றும் நிலையான வைப்புக்கள்
2.3 NRBA இனை திறப்பதற்கு முன் அனுமதி தேவையா?
 
2.3.1 புலம் பெயர்ந்தோரிற்கு
 • NRBA ஐ திறப்பதற்கு முன் அனுமதி தேவையில்லை
2.3.2 இலங்கையல்லாதவர்கள்
 • செலாவணி கட்டப்பாட்டாளரிடம் இருந்து அனுமதியினை பெற வேண்டும்
 • கடவுச்சீட்டு பிரதியுடன் எந்த வங்கியில் கணக்கை திறக்க விரும்புகிறாரோ அந்த வங்கியின் பெயரும் அதன் கிளையுடன் கூடிய கோரிக்கை ஒன்றை செலாவணி கட்டுப்பாட்டாளருக்கு விடுக்க வேண்டும்.
2.4 NRBA க்கு அனுமதிக்கப்பட்ட வரவுகள் எவை?
 
 • உள்ளூரில் பெறப்படம் நிதிகள் (மூலதனம் மற்றும் தற்போதைய வருமானம்)
2.5 இவ் நிதிகளை கணக்கு வைத்திருப்பவர் உள்ளூரில் மீளப்பெற முடியுமா?
 
 •  இலங்கையினுள் உள்ளூர் செலவுகளுக்காக நிதிகளை மீளப்பெற முடியும்.
2.6 NBRA இல் காசோலைகள் விநியோகிக்க முடியுமா?
 
 • காசோலை புத்தகங்களிற்கு அனுமதி இல்லை
 
3. புலம்பெயர்ந்தோர் தடுத்துவைக்கப்பட்ட கணக்கு (MBA)
3.1 MBA என்றால் என்ன?
 
 • இது NRBA இன் சிறப்பு வகை, புலம்பெயர்ந்தோர் (12 யூன் 2013ற்கு பிறகு PR பெற்றோர்) இலங்கையிலிருந்து நிதிகளை அனுப்ப உரிமம் அளிக்கப்பட்ட வர்த்தக வங்கிகளில் திறக்க வேண்டும்
3.2 MBA ஐ திறப்பதற்கு தகுதியானவர்கள் யார்?
 
 • 12 யூன் 2013ற்கு பிறகு PR பெற்றோரும் இந்த கணக்கிற்கு விண்ணப்பிக்க தகுதி உடையோரும் இக் கணக்கிணை பேண மடியும்.
3.3 வெவ்வேறு வங்கிகளில் பல MBA க்களை வைத்திருக்க முடியுமா?
 
 • இல்லை. உரிமம் வழங்கப்பட்ட வர்த்தக வங்கியொன்றில் ஒரு MBA ஐ மட்டும் வைத்திருக்க முடியும்.
3.4 MBA இல் எவ்வகையான கணக்கினை திறக்க மடியும்?
 
 • சேமிப்பு கணக்குகள் மாத்திரம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
3.5 செலவாணி கட்டுப்பாட்டாளரின் முன் அனுமதியினை MBA கணக்கினை ஆரம்பிப்பதற்கு பெற வேண்டுமா?
 
 • இல்லை. புலம்பெயர்ந்தோருக்கு செலாவணி கட்டுப்பாட்டாளரின் முன் அனுமதி தேவையில்லை.
 • எனினும் பலம்பெயர்ந்தவர் எவ் வங்கியினில் MBA கணக்கினை ஆரம்பிக்க விரும்புகிறாரோ அவ்வங்கி செலாவணி கட்டுப்பாட்டு திணைக்களத்திடம் சிறப்பு பதிவு இலக்கம் ஒன்றினை அந்த MBA இனை திறப்பதற்கு முன் பெற வேண்டும்.
3.6 MBA ஐ திறப்பதற்கு எவை தேவை?
 
 • புலம்பெயர்ந்தவர் தமது கடவுச்சீட்டினையும் PR விசாவின் பிரதியையும் எடுத்துச்செல்ல வேண்டும்.
 
4. வதிவற்றோரினால் சொத்துக்களை விற்றல்
4.1 இலங்கைக்கு வெளியில் இருக்கும் ஒருவர் தனது சொத்துக்களை விற்பதற்கு செலாவணி கட்டுப்பாட்டாளரிடம் அனுமதியினை பெற வேண்டுமா?
 
 • இல்லை. இதற்கான பொது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
4.2

விற்பனை மூலம் கிடைத்த தொகையினை  இலங்கைக்கு வெளியில் எவ்வாறு மாற்ற முடியும்?

 
4.2.1 புலம் பெயர்ந்தோரினால்
 • சொத்தானது பரம்பரை அல்லது புலம்பெயர்ந்தோரினால் வெளிநாட்டிலிருக்கும் போது பெறப்பட்டதாயின் புலம்பெயர்ந்தோர் பண ஒதுக்கீட்டில் இதன் வெளிமுக மாற்றம் நடைபெறும்.
 • இலங்கைக்கு உள்முக பண அனுப்பலினால் சொத்தானது பெறப்பட்டிருப்பின் புலம்பெயர்ந்தோர் பண ஒதுக்கீட்டில் இருந்து விலகி சுயாதீனமாக அனுப்ப முடியும், ஆனால் உள்முக பண அனுப்பலினை ஆவணங்கள் மூலம் உறுதிசெய்ய வேண்டும்.
4.2.2 இலங்கையல்லாதோர்
 • விற்றவர் ஆவணங்களுடன் நிதிகளானது இச் சொத்தினை பெறுவதற்கு இலங்கைக்கு அனுப்பட்டது என்பதை உறுதிசெய்தால் (விற்றதன் மூலம் கிடைத்த தொகை/ கிடைக்கப்பெற்ற மூலதனம் உட்பட) இலங்கைக்கு வெளியில் அனுப்ப முடியும்.
 
5. அங்கீகரிக்கப்பட்ட நாணய மாற்றுநர்களும் அவர்களது தொழிலும்
5.1  அங்கீகரிக்கப்பட்ட நாணய மாற்றுநர் (AMC) என்பவர் யார்?
 
 • வெளிநாட்டு நாணயத் தாள்களையும் ரொக்கமான மாற்று பயணிகள் காசோலைகளையும் வாங்கவும் மாற்றவும் செலாவணி கட்டுப்பாட்டுச் சட்டம் (1) a இன் 5ம் பிரிவின் கீழ் மாற்றுவதற்கு செலாவணி கட்டுப்பாட்டாளரினால் அனுமதி அளிக்கப்பட்ட கம்பனிகள் அங்கீகரிக்கப்பட்ட நாணய மாற்றுநர்கள் எனப்படும். எனினும் குறிப்பிட்ட நாணய மாற்றுநர்கள் மத்திய வங்கியினால் வெளிநாட்டு நாணயங்களை வாங்கவும் விற்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளனர்.
5.2 நாணய மாற்று வியாபாரத்தில் ஈடுபடுவதற்கான அனுமதியினை பெறுவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள்.
 
 • நாணய மாற்று வியாபாரத்தில் ஈடுபட விரும்புவர்கள் எழுத்துமூல கோரிக்கை ஒன்றினை இலங்கை மத்திய வங்கியின் செலாவணி கட்டுப்பாட்டு திணைக்களத்திற்கு அனுப்ப வேண்டும்.
5.3 அங்கீகரிக்கப்பட்ட நாணய மாற்றுநராக வருவதற்கு பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தேவைகள் எவை?
 
 • இலங்கையில் இணைக்கப்பட்ட வறையறுக்கப்பட்ட பொறுப்பு கம்பனியாக இருத்தல் வேண்டும்.
 • ஆகக் குறைந்தது இந்த கம்பனியின் இரு நிர்வாகிகள் வருமான வரியை செலுத்துபவராக இருத்தல் வேண்டும்.
 • அந்த கம்பனியின் கொடுக்கப்பட்டதும் வழங்கப்பட்டதுமான மூலம் ஆகக் குறைந்தது Rs. 10 மில்லியனாக இருத்தல் வேண்டும்.
 • நாணய மாற்று வியாபாரத்தை நடத்தக்கூடிய இடமாகவும் அவ்விடத்தில் CCTV கமராக்கள் பொருத்தப்பட்டிருக்கவும் வேண்டும்.
 • இந்த வியாபாரத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் பொருத்தமானவர்களாகவும் சரியான நபர்களாகவும் இருத்தல் வேண்டும்.
 • அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்தபட்சத்தில் செலாவணி கட்டுப்பாட்டாளருக்கு கம்பனி வங்கி உத்தரவாதமாக Rs. 500,000 சமர்ப்பித்தல் வேண்டும்.

சலுகை நியமங்களின் கிழ் பின்வரும் கம்பனிகள்/ வணிக நிலையங்கள் நாணய மாற்று வியாபாரத்தில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டது.

 • பதிவு செய்யப்பட்ட நிதிக் கம்பனிகள்
 • அங்கீகரிக்கப்பட்ட சிறர்ரியல்ப வாய்ந்த வங்கிகள்
 • சிறப்பியல்பு வாய்ந்த குத்தகை ஸ்தாபனங்கள்
 • தெரிவு செய்யப்பட்ட சிறப்பு சந்தைகள்
 • இலங்கை கைப்பணி சபை (லக்சல)
5.4 நாணய மாற்று வியாபாரத்தில் நடைமுறையில் இருக்கும் கம்பனிகள் ஈடுபட முடியுமா?
 
 • ஆம். மேலே (3) இல் குறிப்பிடப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்வோர் நாணய மாற்று வியாபாரத்தில் ஈடுபட முடியும்.
5.5 வெளிநாட்டு கம்பனிகள் இலங்கையில் பதியப்பட்ட கிளைகளை கொண்டிருந்தால், நாணய மாற்று வியாபாரத்தில் ஈடுபட முடியுமா?
 
 • ஆம். விண்ணப்பங்களின் அடிப்படையில் கருதப்படும்.
5.6 அங்கீகரிக்கப்பட்ட நாணய மாற்றுநர்களுக்கு கிளைகள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டள்ளதா?
 
 • ஆம். வெளிநாட்டு நாணய மாற்றுநருக்கு அனுமதி வழங்கப்பட்டு அது தற்பொழுதும் செல்லுபடியாக இருக்கும் எனில், அவர் 02 கிளைகளை குறைந்தது ரூபாய். 10 மில்லியன் மூலதனத்துடன் ஆரம்பிக்க முடியும், இவற்றில் ஒன்று மட்டுமே மேற்கு மாகாணத்தில் திறக்கப்படம் என்றால். எனினும் அந்த கம்பனி 2 கம்பனிகளிற்கு மேல் திறக்க விரும்பினால் திறக்க விரும்பும் ஒவ்வொரு கம்பனிக்கும் மேலதிகமாக ரூபாய். 5 மில்லியன் மூலதனம் தேவைப்படும்.
 • சலுகை நியமங்களின் கீழ் அனுமதி வழங்கப்பட்ட நாணய மாற்றுநர்களுக்கு பொருத்தம் அல்ல.
5.7 அங்கீகரிக்கப்பட்ட நாணய மாற்றுநர்களின் அனுமதிக்கப்பட்ட செயற்பாடுகள் எவை?
 
 • வெளிநாட்டு நாணயத்தினை இலங்கை ரூபாவிற்கு எதிராக கொள்வனவு செய்தல்.
 • ரொக்கமான மாற்று பயணிகள்  காசோலை
 • வேறு வெளிநாட்டு நாணயங்களுக்கு வெளிநாட்டு நாணயங்களை மாற்றிக் கொடுத்தல்.
 • வெளிநாட்டு நாணயத்தினை இலங்கை ரூபாவிற்கு எதிராக விற்றல். (வெளிநாட்டு நாணயங்களை விற்பதற்கு அதிகாரமளிக்கப்பட்ட நாணய மாற்றுனருக்கே இது பொருந்தும்).
5.8 வெளிநாட்டு நாணயங்களை ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் யார்?
 
 • அரச வர்த்தமானி 01.01.2013 திகதியிடப்பட்ட இல. 1791/16 இன் பல நியமங்கள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இலங்கைக்கு வெளியே உள்ளவருக்கு வழங்கப்பட்ட சேவைகள் மற்றும் பொருட்களின் கொடுப்பனவுகளை வெளிநாட்டு நாணயங்களில் இலங்கையிலுள்ளோர் பெறுவதற்கான பொதுவான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
5.9 வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு அகக்கூடிய எவ்வளவு தொகையினை அங்கீகர்க்கப்பட்ட நாணய மாற்றுநர்களினால் விற்க முடியும்?
 
 • லக்சலாவைத் தவிர்த்து, சலுகை நியமங்களின் கீழ் அங்கீகர்க்கப்பட்ட நாணய மாற்றுநர்கள் வெளிநாடு செல்லும் ஒருவருக்கு USD 5,000 ஐ விற்க முடியும். வேறு வரையறுக்கப்பட்ட வெளிநாட்டு கம்பனிகள் US$ 2,000 மட்டும் விற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டள்ளது.
5.10 அங்கீகர்க்கப்பட்ட நாணய மாற்றுநர்களுக்கு வழங்கப்படும் அனுமதி செல்லுபடியாகும் காலம் எவ்வளவு?
 
 • ஒரு வருடத்திற்கான அனுமதியே வழங்கப்படும். எனினும் அனுமதியின் நிபந்தனையினை பூர்த்தி செய்வதை பொருட்டே அனுமதியினை முடிவடையும் திகதிக்கு முன்பு புதுப்பிக்க முடியும்.
5.11 அனுமதியினை புதுப்பிக்கும் பொழுது என்ன நிபந்தனைகளை பயன்படுத்த முடியும்?
 
 • வெளிநாட்டு நாணயங்களை வாங்குவதற்கு அனுமதிக்கப்பட்ட நாணய மாற்றுநர்கள் அந்த வருடத்திற்கான வாங்கிய வெளிநாட்டு நாணயத் தாள்களின் திரும்பல் USD 1.5 மில்லியனிற்கு க்கு மேலானதாக இருத்தல் வேண்டும், அவர்களது அனுமதியினை மேலும் நீடிப்பதற்கு. இது அவர்களது கிளைகளிற்கும் செல்லுபடியாகும்.
 • வெளிநாட்டு நாணயங்களை விற்பதற்கு அனுமதிக்கப்பட்ட நாணய மாற்றுநர்கள் மொத்தமாக USD 4 மில்லியன் திரும்பலிற்கு மேலாக வெளிநாட்டு நாணய கொள்வனவுகளை கொண்டிருக்க வேண்டும் புதுப்பிப்பதற்காக.
 • எனினும், சலுகை நியமங்களின் கீழ் அனுமதி வழங்ககப்பட்ட AMC, மேலே குறிப்பிடப்பட்ட திரும்பல்களுக்கு விதிவிலக்கு.
5.12 பயணிகள் காசோலையினை AMC யிற்கு விற்க முடியுமா?
 
 • AMC ற்கு பயணிகள் காசொலையினை விற்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. பயணிகள் காசொலையினை மாற்றுவதற்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
5.13 AMCs நாணயங்களை வாங்கவதற்கு வரையறை உள்ளதா?
 
 • பொதுமக்களிடம் இருந்து வெளிநாட்டு நாணயங்களை வாங்குவதற்கு AMCs க்கு எந்தவொரு வரையறையும் இல்லை.
5.14 வெளிநாட்டு நாணயங்களை விற்கும் பொழுது அவர்களது கடவச்சீட்டில் அதனை பதிவதற்கு AMC ற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா?
 
 • ஆம்.
5.15 நாணயங்களை விற்கும் போதும் வாங்கும் போதும் நாணய மாற்றுநர்கள் கவனிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை?
 
 • வெளிநாட்டு நாணயங்களை விற்கும் பொழுது, பொது மக்கள் பின்வருவனவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
  • கடவுச்சீட்டு
  • விமான அனுமதிச்சீட்டு
  • பயணத்தின் காரணத்தினை உறுதிசெய்யும் விசா மற்றும் அதனுடன் தொடர்புடைய அவணங்களின் பிரதி மற்றும் ஏதாவது உறுதிபடுத்தும் ஆவணங்கள்.
 • வெளிநாட்டு நாணயங்களை வாங்கும் பொழுது,
  • தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு
5.16 வெளிநாட்டு நாணயத்தாள்களை ரொக்கமாக மாற்றும் பொழுது அந்த நபர்  சுங்கத்தின் உறுதிமொழி படிவத்தினை சமர்ப்பிக்க வேண்டுமா?
 
 • தற்போதைய செலாவணி கட்டப்பாட்டு ஒழுக்காற்று நியமங்களுக்கமைய, வெளிநாட்டு நாணயங்கள் USD 15,000 அல்லது அதற்கு மேலாக, வேறு வெளிநாட்டு நாணயங்களில் கொண்டு வருபவர்கள் இலங்கை சுங்கத்திடம் அதற்காக வடிவமைக்கப்பட்ட படிவத்தில் அதன் பெறுமானத்தை குறிப்பிட்டு கையளிக்க வேண்டும்.
 • எனவே USD 15,000 மேல் ரொக்கமாக மாற்ற விரும்புபவர்கள் சுங்கத்திடம் கொடுத்த படிவத்தின் பிரதியை AMC இடம் காட்ட வேண்டும்.
5.17 பயணத்திற்காக நாணய மாற்றுநர்களிடம் இருந்து வெளிநாட்டு நாணயங்களை வாங்குவது போல வங்கியிடமிருந்து வாங்க முடியுமா?
 
 • US$ 5,000 அல்லது அதற்கு மேலான வெளிநாட்டு நாணயத் தாள்களை பயணம் ஒன்றிற்கு எந்த வர்த்தக வங்கியிடமிருந்தும் பெற்றுக் கொள்ள முடியும்.
 • எனினும் அனைத்து வளங்களிலும் (அதாவது வர்த்தக வங்கிகள் மற்றும் AMCs) US$ 5,000 மிஞ்சாத வெளிநாட்டு நாணயத்தாள்களையே பயணம் ஒன்றிற்கு பெற முடியும்.
5.18 அங்கீகர்க்கப்பட்ட நாணய மாற்றுநர்கள் அனைத்து வெளிநாட்டு நாணயங்களினையும் வாங்கவும் விற்கவும் முடியுமா?
 
 • மாற்றக்கூடிய வெளிநாட்டு நாணயங்களுடன் வியாபாரம் செய்யவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளனர். இந்தியன் மற்றும் பாக்கிஸ்தான் நாணயங்கள் போன்ற தடை செய்யப்பட்ட நாணயங்களுடன் வியாபாரம் செய்ய அனுமதி இல்லை.
5.19 அங்கீகர்க்கப்பட்ட பண மாற்றுநர்கள் பயணிகள் காசோலையினை வெளிநாட்டு நாணயங்களுடன் விற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா?
 
 • பயணிகள் காசோலையினை விற்பதற்கு அங்கீகர்க்கப்பட்ட நாணய மாற்றுநர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
5.20 வெளிநாட்டு நாணயத்தினை விற்பதும் வாங்குவதற்குமான நாணய மாற்று வீதத்தினை எவ்வாறு நாணய மாற்றுநர்கள் அறியலாம்?
 
 • வர்த்தக வங்கியிடமிருந்து அறிந்து கொள்ளலாம்.
5.21 வாடிக்கையாளர் தனது கொடுக்கல் வாங்கல்களுக்கான பற்றுச்சீட்டினை AMC இடம் கேட்க முடியுமா?
 
 • கொள்வனவின் போதோ அல்லது வாங்கும் போதோ வாடிக்கையாளரிடம் AMC பற்றுச்சீட்டினை வழங்க வேண்டும். பொது மக்களுக்கு கொடுக்கல் வாங்கல் தொடர்பான விபரங்கள், AMC விலாசம் மற்றும் பெயர் உள்ளிட்ட விபரங்களை கொண்ட பற்றுச்சீட்டினை வாங்குவதற்கு பொது மக்களுக்கு உரிமை உண்டு.
5.22 அங்கீகரிக்கப்பட்ட நாணய மாற்றுநரை எவ்வாறு ஒருவர் அறிய முடியும்?
 
 • வெளிநாட்டு நாணயத்தினை வாங்குவதற்கோ மற்றும் விற்பதற்கோ அனுமதி அளிக்கப்பட்ட நாணய மாற்றுநர்கள் மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட அனுமதி இலக்கத்தினை அவர்களது பெயர் பலகையில் போட வேண்டும் மற்றும் கீழ் காணும் இலச்சினையும் வியாபாரம் இடம்பெறும் இடத்தில் காட்சிப்படுத்த வேண்டும்.

click this

 

5.23 AMC இனால் ஏதாவது தவறான நடத்தைகள் மேற்கொள்ளப்பட்டால் அதனை மத்திய வங்கியிடம் குற்றம் சாட்ட முடியுமா?
 
 • ஆம். AMC இனால் மேற்கொள்ளப்பட்ட எந்த வியாபார தவறான நடத்தைகளையும் செலாவணி கட்டுப்பாட்டு திணைக்களம், இலங்கை வங்கி, கொழும்பு 01 என்ற முகவரிக்கு அனுப்ப முடியும்.
5.24 தற்பொழுது உள்ள நாணய மாற்றுநர்கள் யார்?
 
 • 11.11.2013 இல் உள்ள  நடைமுறையில் உள்ள நாணய மாற்றுநர்களின் விலாசமும் தொடர்பு கொள்ளும் தகவல்களும் கீழே தரப்பட்டுள்ளது. சலுகை நியமங்களின் கீழ் அனுமதி வழங்ககப்பட்டவர்களின் தலைமை அலுவலகங்களின் விபரங்கள் மட்டுமே உள்ளடக்கப்பட்டுள்ளது.

11.11.2013 இல் உள்ளவாறு வெளிநாட்டு நாணயங்களை வாங்க, மாற்ற மற்றும் விற்பதற்கு அனுமதியளிக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட நாணய மாற்றுநர்கள்

11.11.2013 இல் உள்ளவாறு வெளிநாட்டு நாணயங்களை வாங்க, மற்றும் மாற்ற மட்டும் (விற்பதற்கு அதிகாரமளிக்கப்படவில்லை) அனுமதியளிக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட நாணய மாற்றுநர்கள்

 
6. RFC, NRFC போன்ற வெளிநாட்டு நாணய கணக்குகளும் அதன் தொழிற்பாடுகளும்.
6.1 ஒரு கம்பனி RFC கணக்கினை திறக்க முடியுமா?
 
 • கம்பனி RFC கணக்கினை திறக்க முடியாது. வதியும் தனிநபரினால் மட்டுமே RFC கணக்கினை திறக்க முடியும்.
6.2 எனது RFC கணக்கில் இருந்து NRFC கணக்கிற்கு நிதியினை மாற்ற  முடியுமா?
 
 • இவ்வாறான மாற்றங்களுக்கு அனுமதி இல்லை
6.3 எனது NRFC கணக்கில் இருந்து RFC கணக்கிற்கு நிதியினை மாற்ற  முடியுமா?
 
 • ஆம்.
6.4 எனது   NRFC  கணக்கில் உள்ள நிதிகளை  வேறு NRFC கணக்கிற்கு  மாற்ற முடியுமா?
 
 • ஆம். உங்களால் முடியும்
6.5 எனது   RFC  கணக்கில் உள்ள நிதிகளை  வேறு RFC கணக்கிற்கு  மாற்ற முடியுமா??
 
 • ஆம். உங்களால் முடியும்
6.6 வெளிநாட்டில் பேணும் கணக்கிற்கு NRFC இல் உள்ள நிதிகளை மாற்ற முடியுமா?
 
 • NRFC கணக்கில் செலவுகளிற்கு சுயாதீனமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
6.7 வெளிநாட்டில் உள்ள எனது சகோதரியிடமிருந்து பெறும் நிதியினைக் கொண்டு நான் NRFC கணக்கினை திறக்க முடியுமா?
 
 • எப்போதாவது இலங்கையர்களாக இருந்த இலங்கையர் அல்லது இலங்கையல்லாதோர் எவர் வெளிநாட்டில் வாழ்கிறார்களோ அல்லது வெளிநாட்டில் வேலை செய்து இலங்கைக்கு வந்து 90 நாட்கள் ஆகியிருப்பின் அவர்களால் மட்டுமே NRFC கணக்கினை ஆரம்பிக்க முடியும். ஆகவே இந்தப் பிரமாணத்தினை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.

  எனவே உங்கள் சகோதரியிடமிருந்து பெற்ற பணத்தைக் கொண்டு நீங்கள் NRFC கணக்கினை திறக்க முடியாது.
6.8 NRFC இல் உள்ள பணத்தைக் கொண்டு பங்குகளில் முதலீடு செய்ய முடியுமா?
 
 • ஆம்.
6.9 RFC கணக்கினை திறப்பதற்கு தேவையான மிகக் குறைந்த தொகை எவ்வளவு?
 
 • US$ 100 அல்லது அதற்கு சமமான குறிப்பிடப்பட்ட வேறு வெளிநாட்டு நாணயங்கள்
6.10 இலங்கையில் உள்ள NRFC கணக்கில் வெளிநாட்டு நாணய தாள்களை எவராலும் வைப்பிலிட முடியுமா?
 
 • கணக்கினை வைத்திருப்பவரும் அவரது நெருங்கிய குடும்ப உறவினர்களும் கணக்கில் எந்த அளவிலான தொகையையும் வைப்பிலிட முடியும்.
6.11 NRFC கணக்கிலிருந்து மீளப்பெற்ற தொகையை மீண்டும் NRFC கணக்கில் வைப்பிலிட முடியுமா?
 
 • அந்த கணக்கிலிருந்து உள்ளூர் பணக்கொடுப்பு ரூபாயிலேயே இருக்க வேண்டும். எனவே அந்தக் கணக்கிலிருந்து மீளப்பெற்ற பணத்தை மீண்டும் வைப்பிலிட முடியாது.
6.12 NRFC இல் உள்ள நிதிகளை செலாவணி படியாக நாம் வெளிநாடு செல்லும் பொழுது பயன்படுத்த முடியுமா?
 
 • ஆம். உங்களால் முடியும். US$ 5000 அல்லது அதற்கு சமனான மாற்றக்கூடிய நாணயங்களாக இருத்தல் வேண்டும். வங்கி திட்டக்குறிப்பு அல்லது பயணிகள் காசோலைகள் சமப்படுத்தப்படும்.
6.13 நான் லொற்றிப் பரிசுக்கு தகுதியடைந்துள்ளேன் என்று எனக்கு ஒரு வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்து தகவல் வந்தது. அதற்காக நான் US$ 10 அனுப்ப வேண்டும். இதற்கு எனக்கு செலாவணி திணைக்களத்திடமிருந்து அனுமதி கிடைக்குமா?
 
 • லொத்தரினால் வெற்றிபெற்ற பரிசினை பெறுவதற்கு பண அனுப்பலிற்கு செலாவணி கட்டுப்பாட்டு திணைக்களம் அனுமதி வழங்க மாட்டாது. நீங்கள் வெற்றியாளர் எனின் அப்பணத்தொகையினை உங்களுடைய பெயரில் உள்ள RFC/ நாணயக் கணக்கில் பெறுவதற்கு எந்தவொரு ஆட்சேபனையும் இல்லை.
6.14 என்னிடம் RFC கணக்கு உள்ளது. நான் எனது உறவினரிடம் இருந்து 100 USD யினை பெற்றேன் அதனை RFC இல் வைப்பிலிட முடியுமா?
 
 • ஆம். அனுமதிக்கப்பட்ட வணிகர்களுக்கு குறிப்பிட்ட வெளிநாட்டு நாணய பணங்களை பெறுவதற்கும் அதனை சுங்க உறுதிமொழி அட்டை மற்றும் கடவுச்சீட்டில் சுங்க உறதிப்படுத்தல் ஏதும் இல்லாமல் அதனை RFC கணக்கில் வரவு வைப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
6.15 RFC கணக்கிணை ஒன்றிலும் கூடுதலாக பேண முடியுமா?
 
 • தகுதியான கணக்கு வைப்பாளரினால் எத்தனை RFC கணக்கினை பெணுவதற்கும் ஆட்சேபனை இல்லை
6.16 NRFC கணக்கிணை ஒன்றிலும் கூடுதலாக பேண முடியுமா?
 
 • தகுதியான கணக்கு வைப்பாளரினால் எத்தனை NRFC கணக்கினை பெணுவதற்கும் ஆட்சேபனை இல்லை
6.17 18 வயது அடையாத எனது பிள்ளையின் பெயரில் NRFC கணக்கு ஒன்றினை ஆரம்பிக்க முடியுமா?
 
 • 18 வயது வராத பிள்ளைக்கு அவரது பாதுகாவலர்/ பெற்றோர் இலங்கையில் வதியாதோர் உள்முக பணவனுப்பல்களை தமது பிள்ளைகளிற்காக அனுப்பும் பொழுது அதனை வரவு வைக்க NRFC கணக்கினை திறக்க முடியும், அல்லது நடைமுறையிலுள்ள பெற்றோர்கள்/ பாதுகாவலர்களின் NRFC கணக்கில் இருந்து பணத்தை மாற்றவும் NRFC கணக்கினை திறக்கவும் முடியும்.
6.18 18 வயது அடையாத எனது பிள்ளையின் பெயரில் RFC கணக்கு ஒன்றினை ஆரம்பிக்க முடியுமா?
 
 • 18 வயது வராத பிள்ளைக்கு அவரது பாதுகாவலர்/ பெற்றோர் இலங்கையில் வதியாதோர் உள்முக பணவனுப்பல்களை தமது பிள்ளைகளிற்காக அனுப்பும் பொழுது அதனை வரவு வைக்க RFC கணக்கினை திறக்க முடியும், அல்லது நடைமுறையிலுள்ள பெற்றோர்கள்/ பாதுகாவலர்களின் RFC கணக்கில் இருந்து பணத்தை மாற்றவும் RFC கணக்கினை திறக்கவும் முடியும்.
6.19 எனது NRFC கணக்கிற்கு எதிராக என்னால் கடனினை பெற முடியுமா?
 
 • ஆம். இலங்கையினுள் உள்ள நோக்கத்திற்கு பாவிப்பதற்கு 90% வரையான NRFC இன் கணக்கு மீதியினை ஈடுவைப்பதற்கு எதிராக கடன் வழங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்ட வர்த்தக வங்கிகளிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. NRFC கணக்கு வைத்திரப்பவர்களினால் அந்த கடன் தொகையினை வெளிநாட்டு நாணயத்தில் செலுத்த முடியும் எனும் போதே கடன் வழங்கப்படும்.

  மேலும் சில நிபந்தனைகளிற்கு உட்பட்டு இலங்கையில் வீடு கட்டவோ அல்லது வாங்கவோ வீட்டுக் கடனை NRFC கணக்கு வைத்திருப்பவர்கள் பெற முடியும்.

  இலங்கையில் உள்ள எந்த நோக்கத்திற்காகவும், NRFC கணக்கை வைத்திருக்கும் வெளிநாட்டில் வேலை புரியும் இலங்கையர்கள் இலங்கை ரூபாவில் கடனை பெற முடியும்.
 
7. இலங்கைக்கு வெளியில் உள்ளோர் (வதிவற்றோர்) இனால் இலங்கையில் முதலீடு
7.1 வதிவற்றோரினால் இலங்கையில் செய்ய அனுமதிக்கப்பட்ட முதலீடுகள் எவை?
 
7.1.1 கீழ்வருவனவற்றில் இலங்கையில் முதலீடு செய்ய வதிவற்றோருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 • பிணையங்களில்
 • தொழில் நிலையத்தினை ஆரம்பிப்பதற்கு
 • வங்கி வைப்புகள் (SFIDA)
 • அசையாச் சொத்துக்கள்
 • இலங்கையில் உள்ள கம்பனிகளிற்கு கடன் வழங்குதல்
7.1.2 பின்வரும் பிணையங்களிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 • இலங்கை கம்பனிகள் (பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்படாத) பங்குகளில் (சாதாரனமாண அல்லது தேர்ந்தெடக்கப்பட்ட)
 • இலங்கை அரசாங்கத்தின் திரைசேறி முறிகள் மற்றும் திரைசேறி உண்டியல்கள்
 • இலங்கை அபிவிருத்தி முறிகள் (SLDBs)
 • பரிமாற்று வர்த்தக நிதிகள் உட்பட கூறு நம்பிக்கையில் உள்ள கூறுகளில்
 • பட்டியலிடப்பட்ட இணைக்கப்பட்ட பத்திரங்கள்
7.2 இலங்கையில் எவ்வாறு வதிவற்ற முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய முடியும்?
 
 • அனுமதியளிக்கப்பட்ட வர்த்தக வங்கி ஒன்றில் பிணையங்கள் முதலீட்டு கணக்கினை (SIA) ஆரம்பித்தல். இக் கணக்கு இலங்கை நாணயம் அல்லது குறிப்பிடப்பட்ட எந்த நாணயத்திலும் பேண முடியும்.
 • முதலீட்டு நோக்கத்திற்கான நிதியினை SIA ற்கு வெளிநாட்டு நாணயங்களில் அனுப்புதல்
 • 7.1 இல் குறிப்பிடப்பட்ட முதலீடுகளின் பெறமதி, SIA இலிருந்து ரூபாய் பெறுமதிக்கு மாற்றப்பட முடியும்.
7.3 எவ்வாறு வதிவற்ற முதலீட்டாளர் தனது இலாபத்தினை பெற முடியும்?
 
 • 7.1 இல் குறிப்பிடப்பட்ட முதலீடுகளில் இலாபங்கள் முதலீடு செய்யப்பட்ட SIA கணக்கிற்கு வரவு வைத்தும் அனுப்பவும் முடியும்.
7.4 இலங்கை பங்குகளில் முதலீடு செய்யக்கூடிய வதிவற்ற முதலீட்டாளர்கள் யார்?
 
 • நாட்டின் நிதி, பிராந்திய நிதி அல்லது பரஸ்பர நிதி உட்பட வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்
 • இலங்கைக்கு வெளியில் இணைக்கப்பட்டுள்ள ஒரு இணைக்கப்பட்ட சபை
 • இலங்கையில் அல்லது இலங்கைக்கு வெளியில் வாழும் வெளிநாட்டில் குடியுரிமை பெற்றவர்கள்
 • இலங்கையில் வதிவற்ற இலங்கையர்கள்
7.5 இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு எதாவது கட்டுப்பாடு உள்ளதா?
 
7.5.1 இலங்கையிலுள்ள பின்வரும் தொழிற்பாட்டினை செய்யும் கம்பனிகள் மீது வெளிநாட்டு முதலீடுகள் தடுக்கப்பட்டுள்ளன.
 • கடன் வழங்கும் (பிணையங்களை கொள்வனவு செய்யம் முதலீட்டாளர்களுக்கு பதிவுசெய்யப்பட்ட விளிம்பு வழங்குனரினால் பட்டியலிடப்பட்ட கம்பனிகளைத் தவிர்த்து)
 • அடகுவைத்தல்
 • 1மில்லியன் US டொலர்களை விட குறைந்த மூலதனமடைய சில்லறை வர்த்தகம்
 • கடற்கரை மீன் பிடித்தல்
 • பாதுகாப்பு சேவைகள், பாதுகாப்பு மேலாண்மை, மதிப்பீடு மற்றும் தனியார் நிறுவனங்கள் அல்லது தனிநபர் ஆலோசனை உட்பட
7.5.2 கீழே தரப்பட்டுள்ள தொழில்களை செய்யும் கம்பனிகளில் முதலீட்டின் 40% ற்கு மட்டுமே பங்குகளில் முதலீடு செய்ய முடியும் அல்லது இலங்கை முதலீட்டு சபை ஏதாவது கம்பனியில் கூடிய வீதத்திற்கு பங்ககளில் முதலீடு செய்ய அனுமதி வழங்கினால் அந்த அளவு வீதத்தில் மட்டும்தான் முதலிட முடியும்.
 • உள்நாட்டில் தீர்மானிக்கப்பட்ட அனுமதிக்கப்பட்ட பங்கு/ஒதுக்கீடு தடைகளுக்குட்பட்ட இலங்கை ஏற்றுமதி செய்யும் பொருட்களின் உற்பத்தி
 • தேயிலை, றப்பர், தென்னை. கோப்பி, அரிசி, சீனி மற்றும் வாசனைத் திரவியங்களின் வளர்ப்பு மற்றும் அடிப்படை செயன்முறைகள்
 • மீண்டும் புதுப்பிக்க முடியாத தேசிய வளங்களின் அகழ்வு மற்றும் அடிப்படை செயன்முறைகள்
 • உள்ளூர் தளபாடங்கள் செய்யும் மரங்களை கொண்டு செய்யும் தொழிற்சாலைகள்
 • மீன் பிடித்தல் (ஆழ் கடல் மீன் பிடித்தல்)
 • வெகுஜன தொடர்பு
 • கல்வி
 • சரக்கு பகிர்தல்
 • பயண முகவர்
 • கப்பல் முகவர்
7.5.3 பின்வரும் தொழில்களில் ஈடுபடும் கம்பனிகளின் முலதனத்தில் இலங்கை அரசாங்கத்தினால் அல்லது ஏதாவது சட்டரீதியான அல்லது நிர்வாக அதிகாரிகளினால் பொதுவான அல்லது சிறப்பான அனுமதி வழங்கப்பட்ட குறிப்பிட்ட வீதத்தில் மாத்திரமே பங்குகளை பெற முடியும்.
 • விமான போக்குவரத்து
 • கடற்கரை கப்பல் போக்குவரத்து
 • 1990, 04ம் இலக்க கைத்தொழில் விருத்திச் சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட கைத்தொழில்கள்
  • ஆயுதங்கள், துப்பாக்கி கவை, வெடிபொருட்கள், இராணுவ வாகனங்கள் மற்றும் ஆகாய விமான உபகரணங்கள் மற்றும் வேறு இராணுவ வன் பொருட்கள்
  • விசங்கள், தூக்க மருந்து, மதுபானங்கள், ஆபத்தான மருந்துகள் மற்றும் நஞ்சு சார்ந்த இடர்விளைவிக்கக்கூடிய அல்லது காகினோசனிக்கு பதார்த்தங்களை உருவாக்கும் தொழிற்சாலைகள்
 • பிணைய பத்திரங்கள் அல்லது நாணய குற்றிகள், நாணயம் போன்றவற்றை உருவாக்கும் தொழிற்சாலைகள்
 • இயந்திரமயமாக்கப்பட்ட பெரிய அளவில் இரத்தினங்களை அகழும் தொழிற்சாலைகள்
 • அதிஷ்ட இலாபச் சீட்டுகள்
7.6 திரைசேறி முறி மற்றும் திரைசேறி உண்டியல் போன்ற அரச பிணையங்களில் முதலிடுவதற்கான தகுதி பெற்ற வதிவற்ற முதலீட்டாளர்கள் யாவர்?
 
 • நாட்டின் நிதி, பிராந்திய நிதி அல்லது பரஸ்பர நிதி உட்பட வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்
 • இலங்கைக்கு வெளியில் இணைக்கப்பட்டுள்ள ஒரு இணைக்கப்பட்ட சபை
 • இலங்கையில் அல்லது இலங்கைக்கு வெளியில் வாழும் வெளிநாட்டில் குடியுரிமை பெற்றவர்கள்
 • இலங்கையில் வதிவற்ற இலங்கையர்கள்
7.7 இலங்கையில் எவ்வாறு வதிவற்ற தனிநபர்/ வெளிநாட்டு கம்பனி தொழிலினை செய்ய முடியும்?
  இரண்டு வழிகள் உள்ளன.
 • மேலே 7.5 இல் உள்ள நிபந்தனைகளின் படி இலங்கையில் ஒரு துணை நிறுவனம் சேர்த்துக் கொள்ளுவதன் மூலம்
 • இலங்கையில் ஒரு தொழில் நிலையத்தினை அரம்பிப்பதன் மூலம்

  - 2007, 07 ம் இலக்க கம்பனி சட்டத்தின் கீழ் வெளிநாட்டு கம்பனியாக பதிவு செய்ய வேண்டும்.

  - வெளிநாட்டு கம்பனியின் ரூபாய் கணக்கில் மொத்தமாக USD 200,000 இனை தாய் கம்பனியின் SDA ற்கு பிறம்பாக வரவு வைக்கலாம். அவ் வெளிநாட்டு கம்பனி வியாபாரம், வர்த்தகம், அல்லது தொழில் செயற்பாட்டினை கையாளுவது என்றால்.
 
8. சிறப்பான வெளிநாட்டு நாணய கணக்கு (SPIDA)
8.1 SFIDA வை திறப்பதற்கு தகுதியான முதலீட்டாளர்கள் யார்?
 
 • இலங்கையில் வதிவற்ற இலங்கையர்கள், இலங்கையில் அல்லது இலங்கைக்கு வெளியில் வாழும் வெளிநாட்டில் குடியுரிமை பெற்றவர்கள், இலங்கைக்கு வெளியில் இணைக்கப்பட்டுள்ள ஒரு இணைக்கப்பட்ட சபை, நாட்டின் நிதி, பிராந்திய நிதி அல்லது பரஸ்பர நிதி உட்பட வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்.
8.2 SFIDA கணக்கினை இணைப்பாக தொடங்கி பேண முடியுமா?
 
 • ஆம். இலங்கை ரூபாவில் அல்லது குறிப்பிட்ட வெளிநாட்டு நாணயங்களை இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட முதலீட்டாளர்களால் உரிமம் அளிக்கப்பட்ட வர்த்தக வங்கிகளில் கால வைப்பு அல்லது சேமிப்பு வைப்பு கணக்காக பேண முடியும்.
8.3 SFIDA க்கு அனுமதிக்கப்பட்ட வரவுகள் எவை?
 
i) முதலீட்டிற்கான வங்கித்தொகையின் மூலம் வெளிநாட்டில் இருந்து அனுப்பப்படும் தொகை
ii) கணக்கு வைப்பாளரினால் இலங்கைக்கு கொண்டுவரப்படும், இலங்கைக்கு தற்காலிகமாக வரும் போது பயன்படுத்தலாம் என்று இலங்கை சுங்கத்தினால் உறுதிமொழி செய்யப்பட்ட பயணிகள் காசோலை, வங்கி திட்டக்குறிப்பு அல்லது வெளிநாட்டு நாணயங்கள் போன்றவை வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் வங்கி திட்டக் குறிப்பு கணக்கு வைத்திருப்பவரின் பெயரில் எழுதப்பட்டுள்ளது மற்றும் பயணிகள் காசோலை இலங்கைக்கு வெளியில் வழங்கப்பட்டது என்பன அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தருக்கு ஒருவரால் வழங்கப்படுதல்.
iii)

கணக்கில் உள்ள நிதி முலம் கிடைக்கும் வட்டி

SIA இல் உள்ள நிதிகளைக் கொண்டு SFIDA கணக்கினை ஒருவரால் திறக்க முடியும், ஆனால் முதலீட்டு நோக்கத்திற்காக SFIDA இன் வட்டி மற்றும் முதிர்ச்சி மூலம் கிடைக்கும் தொகையினை SIA கணக்கில் வரவு வைக்க முடியும்.

 

8.4 SFIDA க்கு அனுமதிக்கப்பட்ட செலவுகள் எவை?
 
 • வெளிமுக பணவனுப்பல்கள், வேறு SFIDA க்கான மாற்றல்கள், கணக்கு வைப்பாளரினால் இலங்கையில் செய்த செலவுகள் மற்றும் வேறு சில கொடுப்பனவுகள்
8.5 NRFC, RFC, RNNFC போன்றவற்றில் உள்ள நிதிகளை SFIDA ற்கு மாற்ற முடியுமா?
 
 • SIA இனால் அனுப்பப்பட்ட நிதிகளின் மூலமும் SFIDA திறக்க முடியும் என்பதனால், NRFC, NRNNFC, RNNFC மற்றும் இலங்கைக்கு வெளியில் உள்ள அனுமதிக்கப்பட்ட வர்த்தக வங்கியில் உள்ள வங்கி அலகுகளினாலும் SFIDA ற்கு நிதியினை அனுப்ப முடியும். NRFC, RFC, NRNNFC, OBU அல்லது RNNFC கணக்குகளில் உள்ள நிதியை SFIDA கணக்கில் நேரடியாக முதலிடுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை
 
9. இலங்கையில் வதிவோரினால் இலங்கைக்கு வெளியில் முதலீட்டினை மேற்கொள்ளுதல்
9.1 இலங்கையில் வதிவோரினால் இலங்கைக்கு வெளியில் முதலீட்டினை மேற்கொள்வதற்கு என்ன நடைமுறைகள் உள்ளன?
 
 • பின்வரும் வரையறைகளுக்கு உட்பட்டு, அரச வர்த்தமானி 01.01.2011 திகதியிடப்பட்ட இல. 1686/50 இன் கீழ் வெளிநாட்டிலிருக்கும் கம்பனிகளின் பங்குகளிலும் மற்றும் வெளிநாட்டு அரசாங்க மற்றும் அரசாங்க அமைப்புக்களினால் வெளியிடப்படும் அரசாங்க முறிகளின் மீது முதலீடு செய்வதற்கு மேன்மை தங்கிய நிதி அமைச்சரினால் பொதுவான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • பட்டியலிடப்பட்ட கம்பனிகள் - வருடத்திற்கு USD 500,000 வரை
  • பட்டியலிடப்படாத கம்பனிகள் - வருடத்திற்கு USD 100,000 வரை
  • தனிநபர்/ கூட்டுவியாபாரம் - வாழ்க்கை காலத்திற்கு USD 100,000 வரை
  அரச வர்த்தமானி 01.01.2011 ம் திகதியிடப்பட்ட இல. 1686/52 ற்கு அமைய தனிநபர்கள் இல்லாத வதியும் முதலீட்டாளர்கள் வெளிநாட்டில் வாழும் ஒருவருக்கு வெளிநாட்டில் கிளைகள், இணக்கம், சந்தைப்படுத்துதல், பிரதிநிதித்துவ ஸ்தாபனங்கள், திட்டங்கள், பிரதிநிதிகள் அல்லது வெளிநாட்டு அலுவலகங்களை அமைத்து அதை பேணுவதற்கான கொடுப்பனவுகளை அனுப்புவதற்கான பொதுவான அனுமதி செலாவணி கட்டுப்பாட்டாளரினால் வழங்கப்பட்டுள்ளது.
  முதலிட்டாளரின் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட வெளிமுக முதலீட்டு கணக்கு (OIA) எனும் சிறப்பு கணக்கின் ஊடாகவே அனுப்பப்பட வேண்டும்.
  மேலே குறிப்பிட்ட வரையறையை மீறும் அனைத்து வெளிநாட்டு மூலதனத்திற்கும் நிதி அமைச்சரிடம் இருந்து முன் அனுமதியினை பெற வேண்டும்.
9.1.1 OIA - அனுமதிக்கப்பட்ட வரவுகள்
 • மேலே குறிப்பிடப்பட்டுள்ள அரச வர்த்தமானியில் உள்ள பணிப்புரைகளின் நிபந்தனை மற்றும் குறிப்புகளக்கு உட்பட்டு மூலதன தேவைக்கு அமைய ரூபாவில் பெற்றவற்றை வெளிநாட்டு நாணயமாக மாற்ற முடியும்.
 • வதியும் முதலீட்டாளரின் வெளிநாட்டு நாணய கணக்கிலிருந்தான மாற்றங்கள் (செலாவணி கட்டுப்பாட்டாளரினால் சிறப்பாக அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்கினை தவிர)
 • செலாவணி கட்டுப்பாட்டாளரின் முன்கூட்டிய அனுமதியுடன் வெளிநாட்டு வளத்திடம் இருந்து பெறப்பட்ட வெளிநாட்டு மூலதனத்திற்கான கடன் தொகை
 • வெளிநாட்டு முதலீட்டுடன் தொடர்புடைய பங்கிலாபங்களின் கொடுப்பனவுகள் மூலம் பெறப்படும் உள்முக பணவனுப்பல்கள்
 • அரச முறிகளின் முதிர்ச்சி மற்றும் விற்பனையின் மூலம் கிடைக்கும் தொகை
 • வெளிநாட்டு அலுவலகங்களில் இருந்து கிடைக்கும், இலாபங்கள், விளிம்புகள் மற்றும் நிலுவை நிதிகள்
 • நிர்வாகக் கட்டணம், ஆலோசணை கட்டணம் மற்றும் இந்த கணக்கில் முதலீடு செய்தமைக்கான தள்ளுபடி கட்டணம் என்பவற்றின் மூலம் கிடைக்கப்படும் உள்முக பணவலுப்பல்கள்
 • முலதனப் பெறுதல், உட்பட பங்குகளின் விற்பனை மூலம் கிடைத்த தொகை, வெளிநாட்டு கம்பனிகள் திரவமாக்கப்பட்டால் திரவத்தன்மையின் மூலம் கிடைத்த தொகை, மற்றும் வெளிநாட்டு கம்பனி மூடியமையினால் கிடைக்க பெற்ற தொகைகளின் உள்முக பணவனுப்பல்கள்
 • கணக்கின் வரவினில் உள்ள நிதியினால் பெறப்பட்ட வட்டி
9.1.2 OIA - அனுமதிக்கப்பட்ட செலவுகள்
 • வெளிநாட்டு கம்பனிகளின் பங்குகளை மற்றும் அரச முறிகளை பெறுவதற்கான கொடுப்பனவகளின் போது
 • வெளிநாட்டு அலுவலகங்களை அமைப்பதற்கும் அதன் பராமரிப்பிற்கும் தேவையான செலவிற்கு
 • வங்கிக் கட்டணங்கள். தரகர் கட்டணங்கள், OIA இல் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டிற்கான சலுகைகள்
 • தற்பொழுது உள்ள கொடுக்கல் வாங்கல்களிற்கான இலங்கைக்கு வெளியில் வெளிநாட்டு நாணயங்களின் கொடுப்பனவுகள்
 • இலங்கை ரூபாவில் பணத்தினை மீளப்பெறுதல்
9.2 மேன்மை தங்கிய நிதி அமைச்சரிடம் இருந்து சிறப்பு அனுமதியினைப் பெற எவ்வாறு கோரிக்கை மேற்கொள்ள வேண்டும்?
  "வெளிநாட்டு முதலீடுகள் மீதான சரிபார்ப்பு பட்டியல் மற்றும் வழிகாட்டுதல்கள்" கையேட்டில் உள்ளவாறு கோரிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

9.3 இலங்கை மத்திய வங்கி எதிர்ப்பார்க்கக்கூடிய பிரமாணங்கள் என்ன?
  முதலீடு செய்யப்படகின்ற கம்பனியின் நிதி நிலமை தொடர்பான அறிக்கைகள் மற்றும் வெளிநாட்டு செலாவணி வருவாய்கள், உத்தேச வியாபார நடவடிக்கைகளில் அதன் நிபுனத்துவம் உத்தேச முதலீட்டின் சாத்தியத் தன்மை, முதலீடு செய்யப்படும் நாட்டின் ஒழுங்குவிதிகள், நாட்டிற்கு கிடைக்கக்கூடிய நன்மைகள், முதலீட்டினை அறவிடக்கூடிய காலப்பகுதி போன்றன.

9.4 வெளிநாட்டில் முதலீடு செய்வதற்கு தகுதியுடைய வதியும் இலங்கையர் யார்?
  இலங்கையில் கூட்டிணைக்கப்பட்ட கம்பனிகள், தனிநபர் மற்றும் கூட்டு வியாபாரிகள் இலங்கையில் முதலீட்டினை செய்ய அனுமதிக்கப்படுவர்.

9.5 இலங்கையின் தனியார் ஒருவர் ஊழியர் பங்கு விருப்பு திட்டத்தின் ஊடாக முதலீட்டினை செய்ய அனுமதிக்கப்படுவார்களா?
 

வெளிநாட்டு தொழில் முயற்சிகளின் தொழில் நிறுவனங்களின் கிளை அலுவலகங்களில் வேலைசெய்வோர் ஒரு வதியும் ஊழியருக்கு வருடம் USD 100,000 என்னும் வரையறுக்கப்பட்ட தாய் கம்பனிகள் போன்றவற்றினால் வழங்கப்படும் ஊழியர் பங்கு விருப்புத் திட்டங்களின் (ESOS) ஊடாக முதலீட்டினை செய்ய முடியும்.

ESOS இன் கீழ் அதன் வரையறையை மீறி முதலீடு செய்ய நினைக்கும் ஊழியரின் வேலை வழங்குனர், நிதி அமைச்சரிடம் ஊழியரிற்கு பதிலாக முன்கூட்டியே அனுமதியினைப் பெற வேண்டும்.

9.6 அனுமதிக்காக கருதப்படும் வெளிநாட்டு வியாபார ஸ்தாபனங்களின் வகை எவை?
  முழுமையாக சொந்தமான துணை கம்பனிகள்,கூட்டு நிறுவனங்கள்,இணைக்கப்பட்டஅலுவலகங்கள்,சந்தைப்படுத்தல் அலுவலகங்கள்,திட்ட அலுவலகங்கள் மற்றும் கிளை அலுவலகங்கள்.
 
10. இலங்கைக்கு வெளியில் உள்ளவர்களினால் அசையாச் சொத்துக்களை கொள்வனவு செய்தல்
10.1 இலங்கையிலுள்ள அசையாச் சொத்துக்களை வெளிநாட்டவர் பெற முடியுமா?
 
 • இலங்கை அரசாங்கத்தினால் நேரத்திற்கு நேரம் உருவாக்கப்படும் சட்ட திட்டத்திற்கு உட்பட்டு வெளிநாட்டவர்களினால் இலங்கையில் அசையாச் சொத்துக்களை வாங்க முடியும். சொத்தினை பெறுவதற்கான நிதியினை அனுமதிக்கப்பட்ட வர்த்தக வங்கிகளின் SIA கணக்கின் ஊடாக உள்முக பணவனுப்பல்கள் மூலம் பெற முடியும்.
10.2 பின்னர் அச் சொத்துக்களை விற்பனை செய்தால், அந் நிதியை தாய் நாட்டிற்கு திருப்பி அனுப்ப முடியுமா?
 
 • அச் சொத்து SIA இல் உள்ள நிதியினைக் கொண்டு கொள்வனவு செய்யப்பட்டிருப்பின் விற்ற பணத்தினை அதே SIA கணக்கில் வரவு வைக்க முடியும். கொள்வனவு செய்வதற்கான நிதி நேரடியாக அனுப்பப்பட்டிருந்தால் அனுமதிக்கப்பட்ட வர்த்தக வங்கிகள் உள்முக பணவனுப்பலை நிரூபித்து விற்றதன் மூலம் கிடைத்த பணத்தை வெளிமுக பணவனுப்பல்கள் மூலம் அனுப்புவதற்கு அனுமதி உண்டு
 
11. உத்தரவாதங்கள்
11.1 இலங்கைக்கு வெளியில் வதியும் ஒருவரின் சார்பில் வெளிநாட்டு நாணயத்தில் வங்கி உத்தரவாதம் ஒன்றினை வழங்க முடியுமா?
  ஆம். கீழ் காணும் நியமங்களிற்கும் நிபந்தனைகளிற்கும் உட்பட்டு இலங்கைக்கு வெளியில் வதியும் ஒருவரின் சார்பில் வெளிநாட்டு நாணயத்தில் வங்கி உத்தரவாதம் ஒன்றினை வழங்க முடியும்.
 • USD 1 மில்லியன் வரை இலங்கையில் வதியும் ஒருவரின் சார்பில் இலங்கைக்கு வெளியில் வதியும் ஒருவருக்கு உத்தரவாதம் வழங்க முடியும்
 • இலங்கையில் ஒரு திட்டத்தினை செய்யப்போகும் இலங்கைக்கு வெளியில் வதியும் ஒருவருக்கு இலங்கையில் வதியும் ஒருவரின் சார்பில் USD 500,000 வரை உத்தரவாதத்தினை வழங்க முடியும்.
 • இலங்கைக்கு வெளியில் உள்ள ஒருவரினால் இலங்கைக்கு வெளியில் உள்ள மதிப்புள்ள சர்வதேச வங்கியிடமிருந்து அனுமதியளிக்கப்பட்ட வர்த்தக வங்கி ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் பெறப்பட்ட உத்தரவாதத்திற்கு சமனான மறு உத்தரவாதத்தினை அவர்களுக்கு கடன் வாங்குவதை சாத்தியமாக்குவதற்கான ஒப்பந்தத்தின் தொடர்பில் இலங்கையில் இருப்பவருக்கு இலங்கைக்கு வெளியில் உள்ளவரின் சார்பில் உத்தரவாதம் வழங்கப்படும்.
 • பின்வரும் வரையறைகளிற்கு உட்பட்டு இலங்கையில் உள்ள கம்பனிகளினால் அதனது துணை கம்பனிகள் மற்றும் கிளைகளின் சார்பில் உத்தரவாதத்தினை வழங்க முடியும். இவ் உத்தரவாதம் இலங்கைக்கு வெளியில் அமைக்கப்பட்ட கம்பனிகள் எந்த நாட்டில் உள்ளதோ அந் நாட்டு நிதி நிறுவனங்களில் இருந்து வசதிகளை உயர்த்துவதற்காக
  • இலங்கைக்கு வெளியில் இணைக்கப்பட்ட கம்பனிக்கு USD 250,000 வரை
  • ஒரு கிளை அலுவலகத்திற்கு USD 100,000 வரை
11.2 இதற்காக செலாவணி கட்டுப்பாட்டு அனுமதி தேவையா?
 
 • ஏலத்தில் விலை கூற, செயல்திறன் மற்றும் முற்கொடுப்பனவு முறிகள் அல்லது உத்தரவாதங்கள் மற்றும் மேலே கூறப்பட்ட வரையறைகளுக்கு வழங்கப்பட்ட உத்தரவாதங்களிற்கு செலாவணி கட்டுப்பாட்டாளரின் அனுமதி தேவையில்லை.
  எனினும், பெறுமானம் மேலே குறிப்பிட்ட அளவைவிட கூடுமாயின் செலாவணி கட்டுப்பாட்டாளரிடம் இருந்து விசேட அனுமதியினை பெற வேண்டும்.
 
12. வெளிநாட்டு நாணயக் கடன்களைப் பெறுதல்
12.1 வெளிநாட்டு வளங்களில் இருந்து வெளிநாட்டு நாணயத்திணை பெற செலாவணி கட்டுப்பாட்டின் அனுமதி தேவையா?
 
 • வெளி வர்த்தக கடன் திட்டத்தின் (ECBS) கீழ் கடன் வாங்கப்படுகின்றது என்றால் செலாவணி கட்டுப்பாட்டின் அனுமதி தேவையில்லை.
12.2 வெளி வர்த்தக கடன் திட்டம் (ECBS) என்றால் என்ன?
 
 • 2007,07 ம் இலக்க சட்டத்தின் கீழ் இணைக்கப்பட்ட கம்பனிகள் வெளிநாட்டில் உள்ள நபரிடம் கடன் வாங்குவதற்கு செலாவணி கட்டுப்பாட்டாளர் பொதுவான அனுமதி வழங்கியுள்ளார். ECBS இன் கீழ் 01.01.2013 தொடக்கம் 21.12.2015 வரை

  உத்தரவாதத்தால் வரையறுக்கப்பட்ட அல்லது இலங்கைக்கு வெளியில் உள்ள கம்பனிகளிற்கு இவ் அனுமதி பொருந்தாது.
12.3 ECBS இன் கீழ் கம்பனி வாங்கக் கூடிய அதிகூடிய தொகை எவ்வளவு?
 
 • USD 10 மில்லியன் அல்லது அதற்கு சமனான ஏதாவது வெளிநாட்டு நாணயம். ஒரு கம்பனி ஒரு வருடத்துதிற்கு வாங்கக் கூடிய அதிகூடிய தொகையாக இருப்பின், கடன் வாங்குனர் USD 30 மில்லியன் அல்லது அதற்கு அதற்கு சமனான வெளிநாட்டு நாணத்தினை பெற முடியும். இதை விட கூடிய கடனை பெற விரும்பும் கம்பனி செலாவணி கட்டுப்பாட்டாளரிடமிருந்து விசேட அனுமதியினைப் பெற வேண்டும்.
12.4 விசேட அனுமதிக்கான கோரிக்கை எவ்வாறு பெற முடியும்?
 
 • கீழே தரப்பட்டுள்ள தகவல்கள் மற்றும் ஆவணங்களுடன், இலங்கை வியாபார ஸ்தாபனம் வெளிநாட்டு வளங்களிலிருந்து கடன்களை வாங்குவதற்கான செலாவணி கட்டுப்பாட்டு அனுமதி என்ற வழிகாட்டலுக்கமைய கோரிக்கை ஒன்றினை சமர்ப்பிக்க வேண்டும்.
  • செலாவணி கட்டுப்பாட்டாளரின் விபரிக்கப்பட்டவாறு ஒரு விண்ணப்பப்படிவம்
  • அண்மைக்கால கணக்காய்வு செய்யப்பட்ட நிதியியல் அறிக்கை
  • விண்ணப்பதாரியின் வெளிநாட்டு செலாவணி உழைப்பின் மீதான அனுமதிக்கப்பட்ட வர்த்தக வங்கியினது உறுதிமொழி
  • கம்பனியின் கூட்டிணைவுச் சான்றிதழ் சங்கத்தின் கட்டரையின் பிரதி.
  • கடன் வழங்குபவர் தொடர்பான சான்று
  • கடன் ஒப்பந்தப் பத்திரத்தின் உறுதிசெய்த பிரதி
  • வியாபார செயற்திறனின் பகுப்பாய்வு கூற்று
12.5 செலாவணி கட்டுப்பாட்டுத் திணைக்களம் எதிர்பார்க்கும் பிரமாணங்கள் என்ன?
 
 • வட்டிவீதம், மீளச் செலுத்தப்படும் காலம், கடன் வாங்குனரின் நிதியியல் பலம் போன்ற கடனின் முக்கியமான அம்சங்களை கருத்திற் கொண்டு, செலாவணி கட்டுப்பாட்டாளர், பிரதி செலாவணி கட்டுப்பாட்டாளர் மற்றும் வேறு இரு உயர் அதிகாரிகளைக் கொண்ட கடன் அனுமதி வழங்கும் செயற்குழு விண்ணப்பத்தினை மதிப்பிடும்.
12.6 அனுமதி வழங்குவதற்கு எவ்வளவு காலம் தேவைப்படும்?
 
 • முழுமையான விண்ணப்பம் கிடைக்கப்பெற்று 2 வாரங்களிற்குள் ECD தனது தீர்வை வெளிவிடும்.
12.7 உள்ளூர் வங்கியிடமிருந்து வெளிநாட்டு நாணயக் கடனை பெற செலாவணி கட்டுப்பாட்டு அனுமதி தேவையா?
 
 • கீழ்வரும் தரப்பினர் செலாவணி கட்டப்பாட்டின் அனுமதி இல்லாமல் உள்ளூர் வங்கியில் வெளிநாட்டு நாணயக் கடனினை பெறலாம்.
  • வெளிநாட்டு செலாவணி உழைப்போர் (NRFC) வைத்திருப்பவர்கள்
  • வெளிநாட்டில் வேலைசெய்யும், NRFC கணக்கினை வைத்திருப்பவர்கள்
 • தொழிலில் சாதாரண முன்னேறிச் செல்லும் போது வெளிநாட்டுச் செலாவணியின் ஒழுங்கான பணப்பாய்ச்சல் பெறப்படும் மற்றும் கடனை முழுமையாகவும் நேரத்தில் செலுத்த முடியும் என்பதினை அனுமதி அளிக்கப்பட்ட வர்த்தக வங்கி திருப்தி அளிக்கும் வகையில் FEEA கணக்கினை வைத்திருப்பவர் நிரூபிக்க முடியும்.
 • மேலும் வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு இலங்கை ரூபாவில் அல்லது வெளிநாட்டு நாணயத்தில் NRFC கணக்கு மீதிக்கு எதிராக இலங்கையில் எந்த நோக்கத்திற்காகவும் கடனைப் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை ரூபாவில் வெளியிப்படும் கடனை அவர்கள் உழைக்கும் வெளிநாட்டு நாணயத்தில் செலுத்த முடியும்.
 
13. இலத்திரனியல் நிதியமாற்றல் அட்டையின் (EFTC) தொழிற்பாடுகள்
13.1 கொடுகடன் அட்டை (Credit Card) வைத்திருக்கும் ஒருவரின் மகன் வெளிநாட்டில் படிக்குமிடத்து, அவரின் மகனின் கற்கைக் கட்டணத்தை அவரின் கொடுகடன் அட்டையைப் பயன்படுத்தி செலுத்த முடியுமா?
 
 • இல்லை. கொடுகடன் அட்டை வைத்திருப்பவர் அவரின் மகனின் கற்கை கட்டணத்தை செலுத்துவதற்கு இயலும் வகையில் வங்கியிடமிருந்து துணைக்கடன் அட்டையைப் பெற்றுக் கொள்ள வேண்டும். மொத்த செலவையும் தந்தை இலங்கை ரூபாவில் தீர்ப்பனவு செய்துக்கொள்ள முடியும்.
13.2 கொடுகடன் அட்டை வைத்திருப்பவரின் மருத்தவச் செலவுகளை அவர் வெளிநாட்டில் இருக்கும் போது செலுத்தும் தேவை ஏற்படுகையில் அதனை செலுத்துதலில் ஏதாவது வரையறை உண்டா?
 
 • 20.12.2012 திகதிடப்பட்ட இல. 1789/34 கொண்ட அரச வர்த்தமானி அறிவித்தலின் படி, வெளிநாட்டு வைத்திய செலவுகளை கொடுகடன் அட்டை மூலம் கொடுப்பனவு செய்வதில் எந்த வரையறையும் இல்லை. எனினும் கொடுகடன் அட்டையினை வழங்குபவரினால் விதிக்கப்படம் உச்ச அளவு வரையறையொன்று காணப்படும்.
13.3 தொழிலுக்காக வெளிநாடு செல்லுவோர் அங்கு ஏற்படும் செலவுக்காக அவரின் கொடுகடன் அட்டையினை பயன்படுத்த முடியுமா?
 
 • இல்லை. அவரின் கொடுகடன் அட்டையினை வெளிநாட்டில் பயன்படுத்த முடியாது. அவர் நாட்டை விட்டுச் செல்ல முன்னர் வங்கியிடம் அதனை கையளித்தல் வேண்டும்.
13.4 கம்பனி ஊழியர் ஒருவர், அவரின் கொடுகடன் அட்டையினைப் பயன்படுத்தி அவரின் கம்பனி செலவுகளை தீர்ப்பனவு செய்ய முடியுமா?
 
 • இல்லை. அவரின் சொந்த கடன் அட்டையைப் பயன்படுத்தி வர்த்தக நோக்கங்களிற்கான கொடுப்பனவுகளைச் செய்ய முடியாது.
13.5 CIMA போன்ற கற்கை நெறிகள்/ தொழில் நெறிகளின் பதிவு கட்டணம் மற்றும் பரீட்சை கட்டணம் என்பவற்றை கடன் அட்டையைக் கொண்டு செலுத்த முடியுமா?
 
 • ஆம். உமது பரீட்சைக் கட்டணம் மற்றும் பதிவுக்கட்டணத்தை கொடுகடன் அட்டையின் மூலம் செலுத்த முடியும்.

  அதேபோன்று பதிவுக்கட்டணம், கற்கை கட்டணம், பரீட்சை கட்டணம் மற்றும் வருடச் சந்தா போன்ற வெளிநாட்டு கற்கை நெறிகள் அல்லது வெளிநாட்டு நிறுவன கட்டணங்களை கொடுகடன் அட்டை மூலம் செலுத்த முடியும்
 
14. பொருட்களின் இறக்குமதிக்கான கொடுப்பனவு
14.1 பொருட்களின் இறக்குமதி கொடுப்பனவுகளின் அனுமதிக்கப்பட்ட நியதிகளை விளக்கும் ஒழுங்குமுறை எது?
 
 • “1969 ஆம் ஆண்டு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்ட இலக்கம் 01 இன் கீழ், 2 சனவரி 2012 இல் திகதியிடப்பட்ட அரச அதிவிசேட வர்த்தமானி இல. 1739/6 இல் வெளியிட்ட சிறப்பு இறக்குமதி அனுமதி மற்றும் கொடுப்பனவுகள் ஒழுங்குமுறைகள் – 2011
14.2 இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட மேற்குறிப்பிட்ட ஒழுங்குவிதிகளிற்கு செலாவணி கட்டுப்பாட்டாளர்/ செலாவணி கட்டுப்பாட்டுத் திணைக்களமா நேரடி உரிமையாளர்?
 
 • இல்லை. இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர்/ இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களமே நேரடி உரிமையாளர்.”
14.3 இறக்குமதி மற்றும் ஏற்றுமதி திணைக்களம் இலங்கை மத்திய வங்கி/ செலாவணி கட்டுப்பாட்டு வளாகத்திலா அமைந்துள்ளது?
 
 • இல்லை. இறக்குமதி மற்றும் ஏற்றுமதி திணைக்களம் செலாவணி கட்டுப்பாட்டுத் திணைக்களம், இலங்கை மத்திய வங்கி இரண்டினும் பகுதி அல்ல.
  இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளரின் விலாசமும் தொடர்பு கொள்ளும் இலக்கமும்;

  இறக்குமதி மற்றும் ஏற்றுமதி திணைக்களம்,
  இல. 75, 1/3, 1வது மாடி,
  ஹேமாஸ் கட்டிடம்,
  யோக் தெரு,
  கொழும்பு 01.
  தொலைபேசி: +94 11 2326774
  தொலைநகல்: +94 11 2328486
  இணையத்தளம்: http://www.imexport.gov.lk
14.4 இலங்கைக்கு இறக்குதியினை மேற்கொள்வதற்கு தகுதியானவர்கள் யார?
 
 • சிறப்பு இறக்குமதி அனுமதி மற்றும் கொடுப்பனவுகள் ஒழுங்குமுறை - 2012 (SLPR 2012) இன் அட்டவணை II நியமங்கள் படி;
  • இலங்கை குடியுரிமையாளராக இருக்கும் ஒரு தனிநபர் அல்லது தனது பெயரில் அல்லது தொழில் நிறுவன பெயரின் கீழ் வர்த்தகம் செய்பவர்.
  • இலங்கையில் பதிவு செய்யப்பட்ட ஸ்தாபனம், கூட்டு தொழில் அல்லது வேறு நிறுவனங்கள்
  • 2007 ஆம் ஆண்டு 07ஆம் இலக்க கம்பனி சட்டத்தின் கீழ் இலங்கையில் கூட்டிணைக்கப்பட்ட தனியார் கம்பனிகள் மற்றும் பொது கம்பனிகள்
  • இலங்கையில் வதிவதற்கு செல்லுபடியாகும் விசாவினை கொண்ட இலங்கை அல்லாதவர்
14.5 "சிறப்பு இறக்குமதி அனுமதி மற்றும் கொடுப்பனவுகள் ஒழுங்குமுறைகள் 2011" இன் கீழ் வர்த்தக ரீதியாக பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்ட கொடுப்பனவு நியமங்கள் எவை?
 
 • வர்த்தக இறக்குமதிக்கு அனுமதிக்கப்பட்ட கொடுப்பனவு நியமங்கள்;
  • கொடுப்பனவிற்கு எதிரான ஆவணங்கள் (D/P)
  • கொடுப்பதாக பொருப்பேற்றுக் கொண்டதிற்கான ஆவணங்கள் (D/A)
  • வரவிற்கான கடிதம் (L/C)
  • முற்கொடுப்பனவுகள்
  • உட்பட்டிருக்கும் கணக்கு அடிப்படையில்
  • திறந்த கணக்கு அடிப்படையில்
   (மேலே குறிப்பிடப்பட்ட எந்த சேர்க்கையும்)
14.6 மேற்குறிப்பிட்ட நியமங்களில் நான் மோட்டார் வாகனம் ஒன்றினை இறக்குமதி செய்ய முடியுமா?
 
 • இல்லை. "சிறப்பு இறக்குமதி அனுமதி மற்றும் கொடுப்பனவுகள் ஒழுங்குமுறைகள் 2011" இன் கீழ் 87.02. 87.03, 87,.04 மற்றும் 87.05 எச் எஸ் (HS) இலக்கங்களுடைய மோட்டார் வாகனங்கள் வரவிற்கான கடிதம் (L/C) மூலமே இறக்குமதி செய்ய முடியும்.
14.7 முற்கொடுப்பனவகளைச் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள ஆகக்கூடிய தொகை எவ்வளவு?
 
 • இலங்கையில் உள்ள வர்த்தக வங்கி ஒன்றில் வைத்திருக்கும் எந்தவொரு நாணயக் கணக்கினை* வைத்திருப்பவர்களுக்கு ஆகக்கூடிய தொகை குறிப்பிடப்படவில்லை.
  (*நடைமுறையில் உள்ள சர்வதேச கொடுக்கல் வாங்கலிற்காக அனுமதிக்கப்பட்ட வெளிமுக கொடுப்பனவகள்).

  எனினும் உங்களால் மதிப்புள்ள வெளிநாட்டு வங்கியினால் வழங்கப்பட்ட உத்தரவாதம் அல்லது வெளிநாட்டு வங்கியினால் வழங்கப்பட்ட உத்தரவாதத்திற்கு எதிராக வழங்கப்பட்ட அனுமதிக்கப்பட்ட இலங்கையில் உள்ள வங்கியினால் வழங்கப்பட்ட உத்தரவாதம்/ வரவிற்கான ஆதாரக் கடிதத்தினை சமர்ப்பிக்க முடியாவிடில், ரூபாய் கணக்கில் மேற்கொள்ளப்படும் கொடுப்பனவுகளிற்கு ஐக்கிய அமெரிக்க டொலர் 50,000 அல்லது அதனை விஞ்சாத வேறு வெளிநாட்டு நாணய தொகையே அனுமதிக்கப்பட்டுள்ளது. (உப ஒழுங்குவிதி 6(1)(b) of SILPR2011)
14.8 அனுமதிக்கப்பட்ட முற்பண கொடுப்பனவுகளிற்கு மேன்முறையீட்டை செய்ய முடியுமா?
 
 • ஆம். உங்கள் மேன்மறையீட்டினை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர்/ இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்திற்கு அனுப்ப முடியும்.
14.9 முற்கொடுப்பனவு முறையில் செய்யப்பட்ட கொடுப்பனவுகளிற்கு பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட காலம் எவ்வளவு?
 
 • பணம் அனுப்பப்பட்டு 150 நாட்களிற்கு இடையில், இறக்குமதியாளர்கள் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும்.

  எனினும், முற்கொடுப்பனவுகள் மூலம் இயந்திரங்கள் மற்றும் பாரிய உபகரணங்கள் அல்லது L/C மற்றும் முற்கொடுப்பனவுகளின் சேர்க்கையினால் பொருட்கள் இறக்குமதி செய்யப்படும் எனின் நாட்டிற்கு பணம் அனுப்பி 365 நாட்களில் இறக்குமதியினை செய்ய முடியும்.
14.10 மேலே குறிப்பிட்ட நாட்களில் (180/365 நாட்கள்) எனது வழங்குனரினால் இறக்குமதியினை மேற்கொள்ள முடியாது எனில் அதனை நீடிக்க முடியுமா?
 
 • வழங்குனர் சார்பில் வழங்கப்பட்ட வங்கி உத்தரவாதம்/ வரவிற்கான ஆதாரக் கடிதத்திற்கு உட்பட்டு உப ஒழங்கு விதி 8(3) உள்ள நியமங்களில் 730 நாட்களிற்கு குறையாதவாறு நீடிக்க முடியும்.
14.11 D/A பற்றுச்சீட்டினை செலுத்துவதற்கான கால வரையறை ஏதும் உள்ளதா?
 
 • இல்லை. எனினும் SILPR 2011, 9(1) இன் நியமங்களின் படி, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளரின் எழுதப்பட்ட முன் அனுமதி இல்லாமல், D/A பற்றுச்சீட்டுகளின் முதிர்ச்சி காலத்தில் இருந்து 180 நாட்களின் பின்னும் D/A பற்றுச்சீட்டின் கிழ் இறக்குமதி செய்யப்பட்ட செலுத்தப்படாத இறக்குமதி பற்றுச்சீட்டின் கீழ் எந்தவொரு கொடுப்பனவுகளும் செய்ய முடியாது.
14.12 வர்த்தக அளவு இல்லாமல் சொந்த விடயத்திற்கான இறக்குமதிக்கு அனுமதிக்கப்பட்ட ஆகக் கூடிய தொகை யாது?
 
 • ஐக்கிய அமெரிக்க டொலர் 5,000 அல்லது அதற்கு சமனான வேறு வெளிநாட்டு நாணயங்களிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
14.13 இலங்கைக்கு வெளியில் வெளிநாட்டு செலாவணியில் கொடுப்பனவுகளை மேற்கொள்ளாது செய்யும் இறக்குமதிகளிற்கு ஏதாவது வரையறை உண்டா? (NFE அடிப்படையில்)
 
 • USD 5,000 அல்லது அதற்கு விஞ்சாத மாற்றப்படகூடிய நாணயங்களில் மேற்கொள்ளப்படும் இறக்குமதிகளிற்கு, இலங்கைக்கு வெளியில் வெளிநாட்டு செலாவணியில் கொடுப்பனவுகளை மேற்கொள்ளாது செய்யும் இறக்குமதிக்கு அனுமதி உண்டு. (NFE அடிப்படையில்)

  எனினும், USD 5,000 த்தினை விஞ்சும் பெறுமதியுள்ள இறக்கமதிக்கு. இறக்குமதியின் நோக்கம்/ காரணம் சுங்க பணியாளர் நாயகத்திற்கு திருப்தி அளித்தால் இறக்குமதியினை விடுவிக்க முடியும்.
14.14 நான் SILPR 2011 ற்கு முழுமையாக தகுதி பெற்றிருந்தால், நான் தற்பொழுதும் பொருட்களின் இறக்குமதி தொடர்பில் செலாவணி கட்டுப்பாட்டாளரிடம் இருந்து அனுமதியினை பெற வெண்டுமா?
 
 • இல்லை.
 
15. வியாபார பொருட்களின் ஏற்றுமதி மற்றும் ஏற்றுமதி மூலம் கிடைத்த தொகையும்
15.1 ஏற்றுமதியாளர்கள் ஏற்றமதி மூலம் கிடைத்த தொகையினை 6 மாத காலத்தினுள் தாய் நாட்டிற்கு கொண்டு வர வேண்டுமா?
 
 • 1994 இல் இருந்து ஏற்றமதியாளர்கள் ஏற்றுமதி பெறுகைகளை இலங்கைக்கு கொண்டு வருகின்ற / கையளிக்கின்ற தேவைப்பாடுகளிலிருந்து விளக்கப்பட்டிருக்கின்றனர். இதனால், ஏற்றுமதியாளர்கள் வேறு மூன்று தெரிவுகளை கொண்டுள்ளனர்;
  • ஏற்றமதி மூலம் கிடைத்த தொகையினை தாய் நாட்டிற்கு திருப்பி கொண்டு வந்து அவற்றை ஏதாவது ரூபாய் கணக்கில் வரவு வைக்கலாம்.
  • ஏற்றமதி மூலம் கிடைத்த தொகையினை தாய் நாட்டிற்கு திருப்பி கொண்டு வந்து அவற்றை ஏற்றுமதியாளர்கள் வெளிநாட்டு நாணய கணக்கில் (EFCA) வரவு வைக்க முடியும்.
  • மூலதன சொத்துக்களை வாங்குவதற்கு இந் நிதி பயன்படுத்தப்படாது என்பதற்கு உட்பட்டு வெளிநாட்டில் உள்ள எந்தவொரு வர்த்தக வங்கியிலும் வைத்திருக்கலாம்.
15.2 NRFC அல்லது RFC கணக்கில் ஏற்றமதி மூலம் கிடைத்த தொகையினை வரவு வைக்க முடியுமா?
 
 • இல்லை. அதற்கு அனுமதியில்லை.
15.3 நான் ஏற்கனவே இவ் ஏற்றுமதி கட்டளைக்கு எதிராக வங்கி வசதியினை கொண்டிருக்கும் போது, ஏற்றமதி மூலம் கிடைத்த தொகையினை வெளிநாட்டில் வைத்திருக்க முடியுமா?
 
 • இல்லை. ஏற்றமதி மூலம் கிடைத்த தொகையினை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நீங்கள் பெற்ற வங்கி வசதியினை முடிவு செய்ய வேண்டும்.
15.4 நான் ஏற்கனவே ஏற்றமதி மூலம் கிடைத்த தொகையினை இலங்கையில் EFC கணக்கில் வைப்பிலிட்டேன். நான் வெளிநாட்டில் உள்ள முகவரிக்கு சலுகையினை அனுப்ப முடியுமா?
 
 • ஆம். இலங்கைக்கு அனுப்பப்பட்ட ஏற்றுமதி மூலம் கிடைத்த தொகையில் FDB பெறுமானத்தின் நியாயமான வீதத்தினை வெளிநாட்டில் உள்ள முகவரிக்கு அனுப்ப முடியும்.
15.5 ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் தரம் மற்றும் அளவு தொடர்பாக கொள்வனவாளரினால் கோரப்படும் உரிமையை நான் செலுத்த முடியுமா?
 
 • ஆம். வெளிநாட்டு கொள்வனவாளரினால் கோரப்படும் நியாயமான தொகையினை தேவையான ஆவணங்களை வங்கிக்கு சமர்ப்பிப்பதன் மூலம் ஏற்றுமதியின் மூலம் கிடைக்கப்பெற்ற தொகையிலிருந்து கொள்வனவாளரிற்கு அனுப்ப முடியும்.
15.6 துறைமுக களஞ்சியசாலை வர்த்தகம் எனப்படுவது யாது?
 
 • ஒரு நாடு, வேறு நாட்டில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட அல்லது உற்பத்தி செய்யப்படாத பொருட்களை சுங்கவரி மற்றும் வேறு வரி ஏதும் இல்லாமல் இறக்குமதி செய்து, அப்பொருட்களை மீண்டும் வேறு நாட்டில் உள்ள 3வது நபருக்கு இறக்குமதி செய்த உடனே அல்லது சிறிய செயன்முறைகளை செய்து (மீண்டும் பொதியிடல், மீண்டும் சுட்டுத்துண்டு ஒட்டல் சுங்கத்தரிப்பிடத்திற்கு உள்ளே) அதன் பெறுமதியினை கூட்டி ஏற்றுமதி செய்தல் துறைமுக களஞ்சியசாலை வர்த்தகம் எனப்படும்.
 
16. கப்பல் போக்குவரத்து / விமான சேவை முகவர்கள் மற்றும் சரக்கு அனுப்பும் கம்பனிகள்
16.1 கப்பல் போக்குவரத்து / விமான சேவை முகவர் வெளிநாட்டு நாணயக் கணக்கினை பேண முடியுமா?
 
 • ஆம். கப்பல் போக்குவரத்து / விமான சேவை முகவர்களுக்கான வெளிநாட்டு நாணயக் கணக்கினை பேணும் கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவை முகவர்கள் (FCAASA) நாணயக் கணக்கினை வைத்திருக்கும் அதே வர்த்தக வங்கி (உள்நாட்டு வங்கித் தொழில் பிரிவு) இல் மாத்திரமே தாய் கம்பனி சார்பில் பேண முடியும்.
16.2 FCAASA இன் வரவிற்கு போக்கவரத்து செலவினங்களை வெளிநாட்டு நாணயங்களில் செலுத்துவதற்கு தகுதியானவர்கள் யார்?
 
 • FEEA இல் உள்ள நிதிக்கு எதிராக அல்லது வெளிநாட்டு அனுமதிக்கப்பட்ட வர்த்தக வங்கியில் உள்ள வங்கித் தொழில் பிரிவில் உள்ள அவ்வாறான கணக்குகளை வைத்திருப்பவர்களினால் முடியும்.
16.3 செலாவணி கட்டுப்பாட்டு திணைக்களத்திற்கு கப்பல் போக்குவரத்து முகவர்கள் ஏதாவது ஆவணங்களை/ அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டுமா?
 
 • ஆம். கப்பல் போக்குவரத்து முகவர்கள் ஒவ்வொரு மாதமும் தொடர்பான மாதாந்த பகிர்ந்தளிப்பு கணக்குகள்/ கூற்றுகளை உறுதிப்படுத்தும் ஆவணங்களுடன் சேர்த்து, அடுத்துவரும் மாதத்தின் இறுதி வேலை நாளிற்கு முன்னதாக செலாவணி கட்டுப்பாட்டு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். தொகுக்கப்பட்ட கூற்றுகளின் மென் பொருள் பிரதியினையும் மின்னஞ்சல் மூலமும் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. என்ற முகவரிக்கு சமர்ப்பிக்கலாம். (கோரிக்கை விடும் இடத்தில் மாதிரி மென்பொருள் பிரதி/ எக்சல் படிவத்தினையும் பெற்றுக் கொள்ளலாம்)

  வணிக கப்பல் பணிப்பாளர் நாயகம் (DGMS) அலுவலகத்திடம் இருந்து அனுமதியினை பெற விண்ணப்பிக்கும் போது அதற்காக செலாவணி கட்டுப்பாட்டு திணைக்களத்திடம் அதற்கான ஆட்சேபனை இல்லை/ பரிந்துரை கடிதத்தினை பெறுவதற்கு கீழ் காணும் விபரங்கள்/ ஆவணங்களை மாதாந்த அறிக்கையிடலை விட வேறாக சமர்ப்பித்தல் வேண்டும்.
  • பங்குதாரர்களின் விபரம்
  • வங்கி கணக்குகளின் விபரம்
  • DGMS இனால் வழங்கப்பட்ட கப்பல் போக்குவரத்து அனுமதி பிரதி
   (இவ்வாறான விபரங்களை சமர்ப்பிப்பதற்கான மாதிரியை உடைய ஒரு வழிகாட்டலை கப்பல் போக்குவரத்து முகவர்களிற்கு வழங்கப்பட்டுள்ளது. மாதிரிகள்/ படிவங்களின் மென்பொருள் மாதிரியை தேவையான அடிப்படையில் ECD இடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.)
16.4 கப்பல் போக்குவரத்தின் மீது ஏதாவது மிகக்குறைந்த முகவர் சலுகைகள் உள்ளதா?
 
 • ஆம்.
16.5 சரக்கு அனுப்பும் கம்பனிகள் செலாவணி கட்டுப்பாட்டு திணைக்களத்தில் பதிவு செய்வது கட்டாயமானதா?
 
 • ஆம். அரச அதிவிசேட வர்த்தமானி 20.12.1990 ஆம் திகதியிடப்பட்ட இல. 641/15 இல் உள்ள நியமங்களின் படி.
16.6 செலாவணி கட்டுப்பாட்டு திணைக்களத்தில் எனது கம்பனியை பதிவுசெய்ய பதிவு கட்டணம் எவ்வளவாகும்?
 
 • இலங்கை மத்திய வங்கியின் செலாவணி கட்டுப்பாட்டு திணைக்களத்தினால் எந்தவொரு பதிவுக்கட்டணமும் அறவிடப்பட மாட்டாது.
16.7 சரக்கு அனுப்புனராக பதிவு செய்ய என்ன தகவல்கள் மற்றும் ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்?
 
 1. சரக்கு அனுப்புனராக உங்கள் கம்பனியினை பதிவு செய்ய முறையான கோரிக்கைக் கடிதம்.
 2. வெளிநாட்டு சொத்துக்கள் அல்லது வெளிநாட்டில் வங்கிக் கணக்கு ஏதும் இல்லை என்பதற்கான உறுதிமொழி.
 3. வாடிக்கையாளர்/ தாய் கம்பனிகளில் இருந்து கொடுக்க வேண்டிய பணத்தினை அனுப்பியதற்கான பற்றுச்சீட்டு/ நினைவுப் பத்திரிகை உடன் அடுத்துவரும் மாதத்தின் 15ம் நாளிற்கு முதல் வர்த்தமானி 20.12.1990 ம் திகதியிடப்பட்ட 641/15 இல் உள்ள அட்டவணை III,IV,V மற்றும் VI இல் குறிப்பிட்ட மாதாந்த கூற்றினை கொடுப்பதற்கான உங்கள் ஒப்பந்தத்தினை உறுதி செய்யும் வாக்குமூலம்.
 4. இலங்கை சரக்கு அனுப்பும் சங்கத்திடம் இருந்து பரிந்துரைக் கடிதம் ஒன்று. நீங்கள் இலங்கை சரக்கு அனுப்பும் சங்கத்தில் அங்கத்தவர் இல்லை எனில் சரக்கு அனுப்பும் வியாபாரத்திற்கான கப்பல் சரக்குகளின் மாஸ்ரர் விமான சேவை பற்றுச்சீட்டு/ மாஸ்ரர் பற்றுச்சீட்டினை பெறுவதற்கு உத்தேசித்துள்ள, இலங்கையில் தொழிற்படும் கப்பல் போக்குவரத்து/ விமான சேவையாளரிடமிருந்து இரண்டு கடிதங்களை பெற வேண்டும்.
 5. 2007 ஆம் ஆண்டு 7ம் இலக்க கம்பனி சட்டத்தின் கீழ் கூட்டிணைக்கப்பட்டதற்கான சான்றிதழின் உறுதிசெய்யப்பட்ட பிரதி.
 6. நினைவுப்பத்திரம்/ சங்கத்தின் கட்டரையின் உறுதிசெய்யப்பட்ட பிரதி
 7. வெளிநாட்டு தாய் கம்பனி/ முகவருடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் உறுதிசெய்யப்பட்ட பிரதி
 8. படிவம் 1/ படிவம் 20 (இயக்குநர்களின் விபரம்) இன் உறுதிசெய்யப்பட்ட பிரதி.
 9. குறைந்தது இரு வருடங்களுக்கான கணக்காய்வு செய்யப்பட்ட நிதியியல் அறிக்கை
 10. பட்டய கணக்காளர்/ கணக்காய்வாளர்களினால் உறுதிசெய்யப்பட்ட ஒவ்வொரு பங்குதாரர்களுக்கும் ஒதுக்கப்பட்ட பங்குகளின் விபரங்கள் உட்பட அண்மைக்கால பங்கு மூலதன விபரங்கள் (ஒவ்வொரு பங்குதாரரின் வதிவிட விபரங்களை குறிப்பிடவும்)
16.8 செலாவணி கட்டுப்பாட்டாளருக்கு அனுப்ப வேண்டிய ஆவணங்கள் மற்றும் அதனை வழங்குவதற்கு அனுமதிக்கப்பட்ட காலவரையறை?
 
 • 20.12.1990 ஆம் திகதியிடப்பட்ட இல.641/15 வர்த்தமானியில் மாதிரிகள் பெற முடியும்.
16.9 சரக்கு அனுப்பும் வியாபாரம் மற்றும் கப்பல் போக்குவரத்து முகவர் வியாபாரத்தில் ஈடுபடும் கம்பனிகள் வெளிநாட்டவர்களிற்கு வழங்கக்கூடிய அதிகூடிய பங்குகளின் அளவு எது?
 
 • கம்பனியின் வழங்கப்பட்ட பங்கு மூலதனத்தின் 40% விஞ்சாமல்

  மேலதிக தகவல்களிற்கும் விளக்கங்களிற்கும் தொடர்பு கொள்ளுங்கள்:

    தொடர்பு விபரங்கள்
  புலம்பெயர்ந்தோர் மற்றும் அதனுடன் தொடர்பான விபரங்கள் +94 11 2398641
  வதியாதோரின் சொத்துக்களை விற்பனை செய்தல் +94 11 2398641
  அதிகாரமளிக்கப்பட்ட நாணய மாற்றுநர் மற்றும் அவர்களின் தொழில்கள் +94 11 2477245 / +94 11 2477249
  வெளிநாட்டு நாணயங்களை பெறுவதற்கான அனுமதி +94 11 2477245 / +94 11 2477249
  வரவு/ செலவு/ பயண அட்டைகளும் அதன் தொழிற்பாடுகளும் +94 11 2477249
  RFC, NRFC போன்ற வெளிநாட்டு நாணய கணக்ககள் மற்றும் அதன் தொழிற்பாடுகளும் +94 11 2477508
  உத்தரவாதங்கள் +94 11 2477506 / +94 11 2477358
  இலங்கையில் வெளிநாட்டு முதலீடும் தகுதியான பிரமாணங்களும் +94 11 2477506 / +94 11 2477358
  வதிவற்ற இலங்கையோரினால் இலங்கையில் முதலீடு +94 11 2477506 / +94 11 2477358
  இலங்கையில் வதிவோரினால் வெளிநாட்டில் முதலீடு +94 11 2477506 / +94 11 2477358
  வெளிநாட்டு வளங்களில் இருந்து வெளிநாட்டு நாணய கடன்களை பெறுதல் +94 11 2477506 / +94 11 2477358
  வெளிநாட்டவர்களினால் இலங்கையில் வதியும் சொத்துக்களை பெறுதல் +94 11 2477506
  தற்போதைய சர்வதேச கொடுக்கல் வாங்கல்களிற்கான கொடுப்பனவுகள்
  (பொருட்கள்/ சேவைகள்)
  +94 11 2477252
  பொருட்களின் இறக்குமதியில் முற்கொடுப்பனவுகள் +94 11 2477252
  பொருட்களின் ஏற்றுமதி மற்றும் துறைமுக களஞ்சியசாலை வர்த்தகம் +94 11 2477252
  விமான சேவை/ கப்பல் போக்குவரத்து கொடுக்கல் வாங்கல்கள் +94 11 2477252
  சரக்கு அனுப்பும் கம்பனிகளை பதிவு செய்தல் +94 11 2477252