இலங்கையில் முதலீடு

 
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளில் முதலீடு செய்தல்

01. சாதாரணப் பங்குகளில்

குறிப்பிட்ட விலக்கல்கள்,வரையறைகள் மற்றும் நிபந்தனைகள் என்பவற்றிற்கு உட்பட்டு 19.04.2002 ஆம் திகதியிடப்பட்ட இல. 1232/14,08.08.2002 திகதியிடப்பட்ட இல.1248/19,21.12.2010 ஆம் திகதியிடப்பட்ட இல.1658/2 மற்றும் 20.12.2011  ஆம் திகதியிடப்பட்ட இல.1737/9 கொண்ட அரச வர்த்தமானிகளில் வழங்கப்பட்ட  பொதுவான அனுமதிகளின் நியதிகளில் செலாவணிக் கட்டுப்பாட்டு திணைக்களத்தின் முன்னொப்புதலின்றி வதியும் கம்பனிகள் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு(வதிவற்றோர்) பங்குகளை வழங்குவதற்கு அனுமதிக்கப்படுகின்றன.

ஏதேனும் வழங்கலிலுள்ள பங்குகளுக்கான கொடுப்பனவுகள் அல்லது ஏனைய அனுமதிக்கப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளின் உள்நாட்டு வங்கித்தொழில் பிரிவுகளில் திறக்கப்பட்ட பிணையங்கள் முதலீட்டுக் கணக்குகள் (SIA) இலிருந்து அல்லது கணக்குகளுக்கு மட்டுமே மேற்க்கொள்ளப்படுதல் வேண்டும்.

பங்கிலாபம், விற்பனை மூலம் கிடைத்த தொகை, கொடுத்து தீர்த்ததன் மூலம் கிடைத்த தொகை, மூலதன மீட்சி அல்லது பட்டியலிடப்பட்ட / பட்டியலிடப்படாத கம்பனிகளின் பங்குகளில் இட்ட முதலீட்டுடன் சம்மந்தப்பட்ட பங்குகளை திருப்பிக் கொடுப்பதன் மூலம் கிடைக்கும் தொகையினை முதலில் மூலதனம் மேற்கொள்ளப்பட்ட SIA இல் வரவு வைக்க முடியும்.

வங்கிக் கட்டணங்கள், அரசாங்க வரிகள், முத்திரை வரி, தரகர்களுக்கு பணம் கொடுத்தல் போன்ற ஏதேனும் வளங்களிலுள்ள பங்குகளிற்கு சம்மந்தப்பட்ட பணம் கொடுக்கல்கள் SIA இன் ஊடாக மேற்கொள்ளப்படும்.

உசாத்துணை:

 

02. முன்னுரிமைப் பங்குகளில்

இலங்கைக்கு வெளியில் வதியும்(வதிவற்றோர்) ஒருவர் வகைப்படுடத்தப்பட்ட குறிப்பிட வணிக நிறுவனங்களில் பணம் செலுத்தி மீட்கத்தக்க ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட முன்னுரிமைப் பங்குகளினை வாங்குவதற்கும் பரிமாற்றுவதற்கும்,குறிப்பிட்ட நியமங்கள் மற்றும் நிபந்தனைகளிற்கு உட்பட்டு 04.01.2013 ஆம் திகதியிடப்பட்ட இல.1791/43 அரச வர்த்தமானியில் உள்ள அறிவித்தல்களில் செலாவணி கட்டுப்பாட்டாளரின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.முன்னுரிமைப் பங்குகளின் முதிவுத்திகதி அப் பங்குகள் வழங்கப்பட்ட திகதியிலிருந்து மூன்று வருடங்கள் குறையதிருக்கும்.

19.04.2002 ஆம் திகதியிடப்பட்ட இல.1232/14 அரச வர்த்தமானியில் உள்ள விலகல்கள் மற்றும் வரையறைகளிற்கு உட்பட்டு முன்னுரிமைப் பங்குகளினை சாதாரணப் பங்குகளாக எந்த நேரத்திலும் மாற்ற முடியும்.
உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளின் உள்நாட்டு வங்கித்தொழில் பிரிவுகளில் திறக்கப்பட்ட பிணையங்கள் முதலீட்டுக் கணக்குகள்” (SIA) இலிருந்து அல்லது கணக்குகளுக்கு மட்டுமே முன்னுரிமைப் பங்குகளின் கையகப்படுத்தல் அல்லது பரிமாற்றம் தொடர்பான கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியும்.

உசாத்துணை:

 
வெளிநாட்டு முதலீட்டாளர்களினால் இலங்கை அபிவிருத்தி முறிகளில் முதலீடு செய்தல்

இலங்கை அபிவிருத்தி முறைகள் SLDBs என பெயர் கொண்ட டொலரில் குறித்துறைக்கப்பட்ட அரசாங்க முறிகளில் தகுதியான முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கு 23.07.2008 ஆம் திகதியிடப்பட்ட இல. 1559/16 ஆம் அரசாங்க வர்த்தமானியின் கீழ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

23.07.2008 ஆம் திகதியிடப்பட்ட இல. 1559/16 ஆம் அரசாங்க வர்த்தமானிக்கு அமைவாக பின்வரும் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய முடியும்.

  • இலங்கை மத்திய வங்கியினால் நியமிக்கப்பட்ட முதன்மை வணிகர்கள்
  • இலங்கைக்குள் அல்லது இலங்கைக்கு வெளியில் வெளிநாட்டு அரசாங்கத்தினால் குடியுரிமை பெற்றவர்கள்
  • நிரந்தரமாக இலங்கைக்கு வெளியில் வாழும் இலங்கை குடியுரிமை பெற்றவர்கள்
  • இலங்கை குடியுரிமை உடையவர்கள், வியாபாரம் செய்வதற்காகவோ, உத்தியோகத்தில் ஈடுபடுவதற்காகவோ அல்லது வேலை பெறுவதற்காகவோ இலங்கையிலிருந்து வெளியே சென்றவர்கள்
  • இலங்கைக்கு வெளியில் ஸ்தாபிக்கப்பட்ட கம்பனிகள் அல்லது கூட்டு வியாபார சங்கம்
  • காப்புறுதி தொழிலை கொண்டு நடத்துவதற்காக இலங்கையில் பதிவு செய்யப்பட்ட கம்பனிகள்

இலங்கை அரசாங்கத்தினால் வெளியிடப்படும் SLDBs ஐ வாங்கவும் சந்தைப்படுத்தலுக்கும் செலாவணி கட்டுப்பாட்டாளர் குறிப்பிட்ட முகவர்களுக்கு (பொது படு கடன் கண்காணிப்பாளரினால் நியமிக்கப்படும் முதன்மை பணிகள் மற்றும் வெளிநாட்டு செலாவணியில் அதிகாரமளிக்கப்பட்ட வணிகர்கள்)

SLDBs விவகாரங்களின் நோக்கத்திற்காக குறிப்பிட்ட முகவர்கள் அனுமதியளிக்கப்பட்ட வர்த்தக வங்கிகளில் "இலங்கை அபிவிருத்தி முறிகள் முதலீட்டு கணக்கு (SLDBIA)" மற்றும் "முறிகள் முதலீடு மற்றும் டெலர் கணக்குகளை (DABI)" USD இல் பேண அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

SLDB க்கான கொடுப்பனவுகள் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளில் உள்நாட்டு வங்கித்தொழில் பிரிவுகளில் திறக்கப்பட்ட பிணையங்கள் முதலீட்டுக் கணக்குகள் (SIA) களிலிருந்து அல்லது கணக்குகளுக்கு மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்.

உசாத்துணை:

 
வெளிநாட்டு முதலீட்டாளர்களினால் ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட திறைசேரி முறிகளில் முதலீடு செய்தல்

இலங்கையில் படுகடன் சந்தையினை அபிவிருத்தி செய்யும் பொருட்டு 2006 நவெம்பரில் அரசாங்கம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்காக ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட திறைசேரி முறிகள் (T-bond) சந்தையை திறந்தது.

அனுமதி 22.01.2007 ஆம் திகதியிடப்பட்ட இல. 1481/01 கொண்டு அரச வர்த்தமானியின் மூலம் வழங்கப்பட்டது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் நேரத்தில் உள்ள திரைசேறி முறிகளினதும் (T-bond) மற்றும் திரைசேறி உண்டியல்களினதும் (T-bills) முழு நிலுவையில் 12.5% வரைக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய முடியும்.

வதிவற்றோர் தமது T-bond ற்கான முதலீட்டினை உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளின் உள்நாட்டு வங்கித்தொழில் பிரிவில் திறக்கப்பட்ட  பிணையங்கள் முதலீட்டுக் கணக்குகள் (SIA) அல்லது கணக்குகளுக்கு மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.

விற்பனை அல்லது முதிர்ச்சியிலிருந்து கிடைக்கும் தொகை, T-bond கூப்பன்களில் இருந்து பெறப்படும் தொகையினை T-bond இனை பெறுவதற்கான முதலீட்டினை செய்த SIA இல் வரவு வைக்க முடியும். வங்கிக் கட்டணங்கள், அரசாங்க வரிகள், முத்திரை வரி, தரகர்களுக்கான கொடுப்பனவுகள், முதன்மை வணிகர்களின் கொடுப்பனவுகள் போன்ற துணை கொடுப்பனவுகள் SIA இல் உள்ள நிதிகளைக் கொண்டு செய்ய முடியும்.

உசாத்துணை:

 
வெளிநாட்டு முதலீட்டாளர்களினால் ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட திறைசேரி உண்டியல்களில் முதலீடு செய்தல்

இலங்கை அரசாங்கம் அரசாங்கப் பிணையங்கள் சந்தையினை மேலும் விரிவடையச் செய்து பன்முகப்படுத்தும் நோக்குடனும் திறைசேரி உண்டியல்கள் சந்தையில் போட்டித்தன்மையினையை உயர்த்தும் நோக்குடனும் 2008 மே 23 ஆம் நாளிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட திறைசேரி உண்டியல்கள் சந்தையினை திறந்து விடுவதற்குத் தீர்மானித்தது.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் நேரத்தில் உள்ள திரைசேறி முறிகளினதும் (T-bond) மற்றும் திரைசேறி உண்டியல்களினதும் (T-bills) முழு நிலுவையில் 12.5% வரைக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய முடியும்.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் திறைசேரி உண்டியல்களை பங்கேற்கும் முகவர்களூடாக அதாவது உரிமம் பெற்ற வர்த்த வங்கிகள் மற்றும் முதனிலை வணிகர்களூடாக கொள்வனவு செய்து கொள்ள முடியும்.

வதிவற்றோர் தமது T-bills ற்கான முதலீட்டினை அனுமதி பெற்ற வர்த்தக வங்கிகளின் உள்நாட்டு வங்கித்தொழில் பிரிவில் திறக்கப்பட்ட பிணைய முதலீட்டு கணக்குகளிலிருந்து (SIA) அல்லது கணக்குகளுக்கு மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.

விற்பனை அல்லது முதிர்ச்சியிலிருந்து கிடைக்கும் தொகை, T-bill கூப்பன்களிலிருந்து பெறப்படும் தொகையினை T-bill இனை பெறுவதற்கான முதலீட்டினை செய்த SIA இல் வரவு வைக்க முடியும். வங்கிக் கட்டணங்கள், அரசாங்க வரிகள், முத்திரை வரி, தரகர்களுக்கான கொடுப்பனவுகள், முதன்மை வணிகர்களின் கொடுப்பனவுகள் போன்ற துணை கொடுப்பனவுகளை SIA இல் உள்ள நிதிகளைக் கொண்டு செய்ய முடியும்.

திறைசேரி முறிகளின் கிடைப்பனவு மற்றும் நிலவுகின்ற சந்தை வீதங்கள் என்பன தொடர்பான விபரங்களை உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள், முதனிலை வணிகர்கள் மற்றும் மத்திய வங்கியின் வெப்தளம் (website) (www.cbsl.gov.lk) என்பனவற்றிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

உசாத்துணை:

 
சிறப்பு வெளிநாட்டு முதலீட்டு வைப்புக் கணக்கில் (SFIDA) முதலீடு செய்தல்

செலாவணிக் கட்டுப்பாட்டாளரினால் விடுக்கப்பட்ட பின்வரும் தொழிற்பாட்டு அறிவுறுத்தல்களில் குறித்துரைக்கப்பட்ட நியதிகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ் இலங்கைக்கு வெளியே வதியும் ஆட்களிடமிருந்து அவர்களது உள்நாட்டு வங்கித்தொழில் பிரிவுகளின் வைப்புக்களில் முதலீடுகளை ஏற்றுக்கொள்வதற்கு அதிகாரமளிக்கப்பட்ட வணிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இலங்கையில் வைப்பை வைத்திருக்க விரும்பும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஏதாவது அனுமதிக்கப்பட்ட வர்த்தக வங்கிகளில் SFIDA இனை திறக்க முடியும். குறிப்பிட்ட நாணயங்களில் அல்லது இலங்கை ரூபாவில் SFIDA ஆனது கால வைப்பாகவோ அல்லது சேமிப்பு வைப்பாகவோ திறக்க முடியும். இந்த கணக்கினை இணைகணக்காகவும் கொண்டிருக்க முடியும். USD 10,000 குறைந்த பட்ச நிலுவையாக இருக்க வேண்டும்.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் SFIDA இல் தமது முதலீட்டினை நேரடியாகவோ அல்லது உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளில் உள்ள உள்நாட்டு வங்கித்தொழில் பிரிவில் திறக்கப்பட்ட பிணைய முதலீட்டுக் கணக்கின் (SIA) ஊடாக மேற்கொள்ள முடியும்.

SFIDA ற்கான முதலீடு SIA இனால் மேற்கொள்ளப்பட்டிருந்தால், SFIDA இன் முதிர்ச்சி மூலம் கிடைத்த தொகையினை முதலீட்டிற்கு பயன்படுத்தப்பட்ட SIA யில் வரவு வைக்கப்படும். வங்கிக் கட்டணங்கள், அரசாங்க வரிகள், முத்திரை வரி, போன்றவற்றிற்கான கொடுப்பனவுகளை SIA இல் உள்ள நிதிகளைக் கொண்டு மேற்கொள்ள முடியும்.

உசாத்துணை:

 
இலங்கையில் வியாபாரத் தளங்களைத் திறப்பதற்கு வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு அனுமதியளித்தல்

இலங்கைக்கு வெளியே கூட்டிணைக்கப்பட்டதும் 2007ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் வெளிநாட்டு கம்பனிகளாக பதிவு செய்யப்பட்டதுமான கம்பனிகளுக்கு 22.11.2010 ஆம் திகதியிடப்பட்ட இல. 1618/10 கொண்ட அரச அதிவிசேட வர்த்தமானியின் மூலம் கிளைகள், செயற்றிட்டம், தொடர்பு அல்லது பிரதிநிதித்துவ அலுவலகங்களின் கீழ் இலங்கையில் வியாபாரத்தினைக் கொண்டு நடாத்துவதற்கு செலாவணி கட்டுப்பாட்டாளரினால் அனுமதி வழங்கப்பட்டது.

மேலே கூறப்பட்ட வர்த்தமானி அறிவுறுத்தல்களுக்கு அமைய, அனுமதிக்கப்பட்ட வர்த்தகம், வியாபாரம் அல்லது கைத்தொழில் செயற்பாட்டில் ஈடுபடுவதற்கு குறைந்தது USD 200,000 இனை முதலிட வேண்டும். உரிமம் அளிக்கப்பட்ட வர்த்தக வங்கிகளில் திறக்கப்பட்ட பிணைய முதலீட்டுக் கணக்குகளின் (SIA) ஊடாக மட்டும் தான் மேலே கூறிய முதலீட்டை மூல கம்பனியினால் (Parent Company) அனுப்ப முடியும்.

வெளிநாட்டு கம்பனிகள் இலங்கையில் பதிவு செய்த பின் தாய் கம்பனியின் SIA இல் இருந்து USD 200,000 ற்கு சமனான ரூபாய் நாணயத்தினை இலங்கையிலுள்ள வெளிநாட்டு கம்பனிகளின் ரூபாய் கணக்கிற்கு மாற்ற வேண்டும்.

வெளிநாட்டு அலுவலகங்களினது இலாபங்கள், மிகை நிதிகள், உரிமம்/ ஆதாய உரிமம் போன்ற கொடுப்பனவுகள் மூல கம்பனியின் SIA இல் வரவு வைக்க முடியும். தேவையின் பொருட்டு மூல கம்பனி தனது வெளிநாட்டு அலுவலகத்தின் பராமரிப்பு கொடுப்பனவினை தனது SIA நிதியில் இருந்து கொடுக்க முடியும்.

உசாத்துணை:

 
உள்நாட்டுக் கம்பனிகளினால் வழங்கப்பட்ட ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட தொகுதிக் கடன்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடுகளை மேற்கொள்ளுதல்

அரச வர்த்தமானி 22.11.2010 இல. 1681/11 இன் கீழ் பட்டியலிடப்பட்ட கடன் பத்திரங்களில் 100% வரை முதலீட்டினை மேற்கொள்வதற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு செலாவணி கட்டுப்பாட்டாளரினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உரிமம் அளிக்கப்பட்ட வர்த்தக வங்கிகளில் உள்நாட்டு வங்கித்தொழில் பிரிவில் ஆரம்பித்த பிணைய முதலீட்டுக் கணக்குகளின் (SIA) மாத்திரமே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமது முதலீட்டினை மேற்கொள்ள முடியும்.

கடன் பத்திரிகைகளிற்கு முதலீடு செய்த SIA இல் விற்பனை அல்லது கடன் பத்திரிக்கையின் முதிர்ச்சியால் கிடைத்த தொகையை வரவு வைக்க முடியும். வங்கிக் கட்டணங்கள், அரசாங்க வரிகள், முத்திரை வரிகள், போன்ற கடன் பத்திரிகையுடன் தொடர்பான கொடுப்பனவுகளை SIA இல் உள்ள நிதிகளிலிருந்து மேற்கொள்ள முடியும்.

உசாத்துணை:

 
உள்நாட்டு கூறுநம்பிக்கைகளினால் வழங்கப்பட்ட கூறுகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்தல்

அரச வர்த்தமானி 18.08.2011 இல. 1719/22 இன் கீழ் பிணைய மற்றும் செலாவணி ஆணைக்குழுவினால் (SEC) அனுமதி வழங்கப்பட்டு இயங்கும் உள்நாட்டு நம்பிக்கையினால் வழங்கப்படும் கூறுகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்களினால் முதலீடு செய்வதற்கு செலாவணி கட்டுப்பாட்டாளரினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உரிமம் வழங்கப்பட்ட வர்த்தக வங்கிகளில் உள்ள உள்நாட்டு வங்கிப்பிரிவுகளில் ஆரம்பிக்கப்படும் பிணைய முதலீட்டுக் கணக்கில் (SIA) முதலீடு செய்ய முடியும்.

கூறுகள் SIA இனால் வழங்கப்பட்டிருந்தால், கூறுகளின் விற்பனை அல்லது மீட்சியினால் பெறப்படும் தொகை மற்றும் பங்கிலாப வருமானங்களை முதலீடு செய்ய பயன்படுத்திய SIA இல் வரவு வைக்க முடியும்.

உசாத்துணை:

 
வெளிநாட்டு முதலீட்டாளர்களினால் இலங்கை கம்பனிகளுக்கு கடன் கொடுத்தல் (சாதாரண அல்லது விசேட அனுமதியுடன்)

செலாவணி கட்டுப்பாட்டு சட்டத்தின் பிரிவு 5 இன் கீழ் இலங்கையில் வாழும் எந்த நபரும் வெளிநாட்டு நாணயத்தை கடனாகப் பெற இலங்கை மத்திய வங்கியிடம் முன்கூட்டிய அனுமதியினை பெற வேண்டும்.

அரச வர்த்தமானி 01.01.2013 இல. 1791/15 இல் அறிமுகப்படுத்தப்பட்ட வெளியான வர்த்தக கடன் வாங்கும் திட்டத்தின் (ECBS) கீழ் இலங்கையிலிருக்கும் கம்பனி சட்டம் 2007, 07 ம் இலக்க சட்டத்தின் கீழ் இருக்கும் எந்த கம்பனியும் வெளிநாட்டில் உள்ள நபரிடம் இருந்து கடனை வாங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

2007, 07 ம் இலக்க சட்டத்தின் கீழ் இலங்கையில் உள்ள கம்பனிகள் வெளிநாட்டில் உள்ளவர்களிடம் இருந்து பணத்தை பெறுவதற்காக செலாவணி கட்டுப்பாட்டாளரினால் அளிக்கப்பட்ட திட்டம் ECBS திட்டமாகும். இது 01.01.2013 தொடங்கி 31.12.2015 வரை ஆகும்.

இவ் அனுமதி உத்தரவாதத்தினால் வரையறுக்கப்பட்ட அல்லது இலங்கைக்கு வெளியில் இருக்கும் இலங்கையரின் கம்பனிகளுக்கு பொருத்தமானது அல்ல.

ECBS இன் கீழ் கடன் வாங்குபவர் USD 30 மில்லியன் அல்லது அதற்கு சமனான பெறுமதியுடைய வேறு நாணய வடிவிலும் பெறமுடியும். எப்பொழுதெனில் ஒவ்வொரு கம்பனிக்கும் ஒவ்வொரு வருடத்திற்குமான பெறக்கூடிய கடன் தொகை USD 10 மில்லியன் அல்லது அதற்கு சமனான வேறு நாணய வடிவிலும் ஆகும்.

மேலே குறிப்பிட்ட அளவிலும் கூடிய அளவு கடனைப் பெற விரும்பும் எந்தக் கம்பனியும் செலாவணிக் கட்டுப்பாட்டாளரின் முன்கூட்டிய அனுமதியை பெற வேண்டும்.

அனுமதிக்கப்பட்ட வர்த்தக வங்கிகளில் உள்ள உள்நாட்டு வங்கித்தொழில் பிரிவில் ஆரம்பிக்கப்பட்ட பிணைய முதலீட்டுக் கணக்கினால் (SIA) மட்டுமே செலாவணிக் கட்டுப்பாட்டாளரிடம் இருந்து பெறப்பட்ட அனுமதி மூலம் கிடைத்த கடனினால் பெற்ற தொகையை அனுப்ப முடியும்.

ECBS இன் கீழ் பெறப்பட்ட கடன் தொகை இலங்கைக்கு கடன் வழங்குனரின் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட SIA இனால் அனுப்பப்படும்.

ஆரம்பத்தில் கடன் தொகையானது கடன் வழங்குனரின் SIA இனால் அனுப்பப்பட்டிருப்பின், கடனை திருப்பிச் செலுத்துதல், வட்டி, கடனுடன் தொடர்புபட்ட கொடுப்பனவுகள் மற்றும் கட்டணங்கள், பிணை விநியோகத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற நிதி, கடன்களில் ஏற்பட்ட வழுக்களிற்கு எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைக்கு சட்ட வழக்கு மன்றத்தினால் நஷ்ட ஈடு ஈடு SIA க்கு வரவு வைக்க முடியும் மற்றும் SIA இல் இருந்து தாய் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படும்.

உசாத்துணை: