இலங்கையில் வதிவோர்

 
வதிவோர் வெளிநாட்டு நாணயக் கணக்கு (RFC)

இலங்கையில் வாழும் குடியுரிமையுடைய அல்லது குடியுரிமையற்ற எந்தவொரு நபராலும், பின்வரும் தொழிற்பாட்டு அறிவுறுத்தல்கள் / பணிப்புரைகளில் குறித்துரைக்கப்பட்ட நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டு, உரிமம் அளிக்கப்பட்ட வர்த்தக வங்கி / நிதி நிறுவனங்களில் உள்நாட்டு வங்கித்தொழில் பிரிவுகளில் குறிப்பிட்ட வெளிநாட்டு நாணயங்களில் வதிவோர் வெளிநாட்டு நாணயக் கணக்கினை திறப்பதற்கும் பேணுவதற்கும் முடியும்.

உசாத்துணை:

 
வெளிநாட்டுச் செலாவணி உழைப்போர் கணக்கு (FEEA)

பின்வரும் பணிப்புரைகளில் குறிப்பிடப்பட்ட நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டு, உரிமம் அளிக்கப்பட்ட வர்த்தக வங்கிகளின் உள்நாட்டு வங்கி பிரிவுகளில் வெளிநாட்டுச் செலாவணியை உழைக்கும் இலங்கையில் வாழும் அனைவரினாலும் வெளிநாட்டுச் செலாவணி உழைப்போர் கணக்கினை ஆரம்பிக்க முடியும்.

உசாத்துணை:

 
பன்னாட்டு பணிகள் வழங்குவோருக்கும் அவர்களது ஊழியர்களுக்குமான வெளிநாட்டு நாணயக் கணக்குகள் (FCAISPE)

வருமான வரிவிலக்கிற்கு தகுதிபெற்ற இலங்கையில் உள்ள கம்பனிகள் மற்றும் கூட்டு வியாபாரங்களும், பன்னாட்டு சேவைகள் மற்றும் தகுதியான சேவை வழங்குனரினால் வேலையில் ஈடுபடுத்தப்படும் தனிநபரினாலும் பின்வரும் பணிப்புரைகளில் குறித்துறைக்கப்பட்ட நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டு, உரிமம் அளிக்கப்பட்ட வர்த்தக வங்கிகளில் உள்நாட்டு வங்கித்தொழில் பிரிவுகளில் குறிப்பிட்ட வெளிநாட்டு நாணயங்களில் பன்னாட்டு பணிகள் வழங்குவோருக்கும் அவர்களது ஊழியர்களுக்குமான வெளிநாட்டு நாணயக் கணக்கினை (FCAISPE) ஆரம்பிக்க முடியும்.

உசாத்துணை:

 
வெளிமுக முதலீட்டு கணக்கு (OIA)

இலங்கையில் வதியும் ஒரு நபர் வெளிநாடுகளில் முதலீட்டைச் செய்வதற்கான நிதியை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு சிறப்பு கணக்கே வெளிமுக முதலீட்டு கணக்கு ஆகும்.

பின்வரும் பணிப்புரைகளில் / வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டு அதிகாரமளிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு வதியும் முதலீட்டாளர்களின் பெயரில் உரிமம் அளிக்கப்பட்ட வர்த்தக வங்கிகளில் உள்நாட்டு வங்கித்தொழில் பிரிவுகளில் வெளிமுக முதலீட்டுக் கணக்கை ஆரம்பித்து பேணுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

உசாத்துணை:

 
வதியும் இலங்கையரல்லாதோர் வெளிநாட்டு நாணயக் கணக்கு (RNNFC)

வதியும் விசாவில் இலங்கையில் ஒன்றில் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ வதிகின்ற இலங்கையரல்லாதவர்களுக்காக உள்நாட்டு வங்கித்தொழில் பிரிவில் வதியும் இலங்கையரல்லாதோர் வெளிநாட்டு நாணயக் கணக்குகளைத் திறப்பதற்கும் பேணுவதற்கும் அதிகாரமளிக்கப்பட்ட வணிகர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. நியதிகளும் நிபந்தனைகளும் பின்வரும் தொழிற்பாட்டு அறிவுறுத்தல்கள்/ பணிப்புரைகளில் குறித்துரைக்கப்பட்டுள்ளன.

உசாத்துணை:

 
வதியும் விருந்தினர் திட்டம் - சிறப்புக் கணக்குகள்

நாட்டின் பொருளாதார மற்றும் சமூக-கலாச்சார அபிவிருத்தியில் பங்குபெறும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் நெறிஞர்களுக்காக 1991 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் வதியும் விருந்தினர் திட்டமாகும்.

முதலீட்டு நோக்கத்திற்காகவும் மற்றும் அவற்றை பாதுகாப்பதற்காக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் நெறிஞர்களும் இலங்கைக்கு பணத்தை அனுப்புதல் வேண்டும்.

ஒரு முதலீட்டாளர் மொத்தமாக USD 250,000 அல்லது அதற்கு சமனான எந்தவொரு வெளிநாட்டு நாணயத்திணையும் முதலீட்டுக்காகவும், இலங்கையில் வாழ்க்கை செலவிற்காக ஒருவருக்கு USD 35,000 வீதம் முதலீட்டாளர் அவருக்கும் மற்றும் அவரை சார்ந்து உடன் இருப்போருக்காவும் அனுப்புதல் வேண்டும்.

தொழில் நெறிஞர்கள் இலங்கையில் வாழ உத்தேசித்திருப்பவர்கள் மாதம் USD 2,000 தங்கள் வாழ்க்கை செலவிற்காகவும் மற்றும் மாதம் USD 1000 வீதம் வாழ்க்கைத்துணை உட்பட தம்மை சார்ந்திருக்கும் ஒவ்வொருவருக்கும் அனுப்புதல் வேண்டும்.

கீழே குறிக்கப்பட்டுள்ள நியதிகளில் உள்ள அறிவுறுத்தல்/ பணிப்புரைகளுக்குட்பட்டு உரிமம் அளிக்கப்பட்ட வர்த்தக வங்கிகளில் உள்நாட்டு வங்கித்தொழில் பிரிவுகளில் வதியும் விருந்தினர் வெளிநாட்டு நாணயக் கணக்கு (RGFCA) மற்றும் வதியும் விருந்தினர் ரூபாக் கணக்கு (RGRCA) ஆகிய கணக்குகளை தகுதியான முதலீட்டாளர்/ தொழில் நெறிஞர்களின் பெயரில் ஆரம்பித்து பேணுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உசாத்துணை:

 
மூத்த வெளிநாட்டு பிரசைகள் - சிறப்புக் கணக்குகள்

“இலங்கை எனது கனவு இல்லம் நிகழ்ச்சித்திட்டம்” இன் கீழ் வதியும் விசாவில் தங்கள் தங்கும் காலத்தை நீடிக்க விரும்பும் மூத்த வெளிநாட்டு பிரஜைகளை வரவேற்க இலங்கை அரசு தீர்மானித்துள்ளது. இத்திட்டம் 55 வயதிற்கு மேலே உள்ள அனைத்து மூத்த வெளிநாட்டு பிரஜைகளுக்கும் திறக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் தங்கள் வாழ்க்கைத்துணை மற்றும் தம்மை சார்ந்தவர்களை அழைத்துவர அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த நோக்கத்திற்காக அதிகாரமளிக்கப்பட்ட விநியோகஸ்தர்களிற்கும் கீழே குறிப்பிட்டுள்ள பணிப்புரைகளில் குறித்துரைப்பட்டுள்ள நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டு உரிமம் அளிக்கப்பட்ட வர்த்தக வங்கிகளின் உள்நாட்டு வங்கித்தொழில் பிரிவில் மூத்த மூத்த வெளிநாட்டு பிரஜைகள் - சிறப்புக் கணக்கினை குறிப்பிட்ட வெளிநாட்டு நாணயங்களில் ஆரம்பித்து பேணுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உசாத்துணை:

 
அந்நிய வெளிநாட்டு கப்பல் போக்குவரத்து விமான சேவைகள் முகவர்களின் வெளிநாட்டு நாணய வைப்புக்களின் முகவர்களாகவுள்ள வெளிநாட்டு கப்பல் போக்குவரத்து விமான சேவை முகவர்கள் (FCAASA)

இலங்கையில் செயற்படும் கப்பல் போக்குவரத்து, விமான சேவை முகவர்களின் அந்நிய செலாவணி பரிமாற்றங்களை வெளிப்படுத்தும் பொருட்டு அறிமுகப்படுத்தப்பட்ட வழிமுறை FCAASA ஆகும். அதே அந்நிய தாய் கம்பனிக்காக அதே அதிகாரமளிக்கப்பட்ட வணிகருக்காக முகவர்களினால் கொண்டு நடாத்தப்படும் ரூபாய் கணக்கு வைப்புகளுடன் FCAASA ஒன்று திறக்கப்பட வேண்டும். அதே வேளை அந்தக் கணக்கு முகவரின் பெயரில் அந்நிய தாய் கம்பனியின் பெயரை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.

கீழே தரப்படும் இலங்கையில் வசிக்கும் (இதன் பின் "முகவர்" என்று குறிப்பிடப்படும்) இலங்கையில் அந்நிய கப்பல் போக்குவரத்து விமான சேவைகள் (இதன் பிறகு "Principal" என குறிப்பிடப்படும்) நபர்கள்;

  1. இலங்கையில் கப்பல் போக்குவரத்து பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கப்பட்ட இலங்கையிலுள்ள கப்பல் போக்குவரத்து முகவர்களாக செயற்பாட்டினை முன்னெடுப்பதற்கான அனுமதி பத்திர விபரங்களின் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையினுள் அந்நிய கப்பல் போக்குவரத்து முகவர்களாக செயற்பட அதிகாரம் அளிக்கப்பட்ட அந்நிய கப்பல் போக்குவரத்து முகவர்கள்.

  2. சிவில் விமான போக்குவரத்து பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கப்பட்ட அனுமதி/ செல்லுபடியாகும் சர்வதேச விமான சேவை அனுமதி பத்திரத்தினை வைத்துள்ள அந்நிய விமான சேவை நிறுவனமொன்றின் பொது விற்பனை முகவர்களாக இலங்கையினுள் வர்த்தக செயற்பாடுகளை முன்னெடுக்கும் அதிகாரம் அளிக்கப்பட்ட யாராவது ஒருவர்.

உசாத்துணை:

 
உள்முகப் பணவனுப்பல்கள் பங்கீட்டுக் கணக்கு (IRDA)

கீழே குறிப்பிடப்படும் நியமங்கள் மற்றும் நிபந்தனைகளுக்கு அமைய அங்கீகரிக்கப்பட்ட வணிகர்கள், வெளிநாட்டு வேலை வழங்குனர்களினால் இலங்கையில் வேலைக்கு அமர்த்தப்பட்ட இலங்கையர்களின் ஊதியங்களை வழங்குவதற்காக அவ் வெளிநாட்டு வேலை வழங்குனர்களினால் ஒழுங்கமைக்கப்பட்டு ஒன்றிணைக்கப்பட்ட கம்பனிகளுக்காக IRDA கணக்கொன்றை ஆரம்பிப்பதற்கும் நடத்துவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உசாத்துணை:

 
சுனாமிக்குப் பின்னைய உள்முகப் பணவனுப்பல்கள் கணக்கு (PTIRA)

பின்வரும் தொழிற்பாட்டு அறிவுறுத்தல்களில் குறித்துரைக்கப்பட்ட நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டு, இலங்கையில் தொழிற்படுகின்ற அரசல்லா அமைப்புக்களுக்கு வெளிநாட்டு அரசாங்கங்கள் உட்பட வெளிநாட்டு ஆட்களிடமிருந்து பெறப்படுகின்ற அனைத்து உள்முகப் பணவனுப்பல்களும் 'சுனாமிக்குப் பின்னைய உள்முகப் பணவனுப்பல் கணக்கு' ஊடாகவே வழிப்படுத்தப்பட வேண்டும். இக் கணக்கு இலங்கை ரூபாவினிலே தான் பேணப்பட வேண்டும்

உசாத்துணை: