வதிவோரினால் இலங்கைக்கு வெளியில் முதலீட்டினைச் செய்தல்

 
இலங்கைக்கு வெளியில் உள்ள கம்பனிகளில் பங்குகளில் அல்லது வெளிநாட்டு அரச மற்றும் அரச அமைப்புகளினால் வெளியிடப்படும் அரசாங்க பத்திரங்களில் முதலீடு செய்தல்

இலங்கைக்கு வெளியில் பிணைகளை பெறுவதற்கோ வைத்திருப்பதற்கோ அல்லது இடமாற்றுவதற்கோ, செலாவணி கட்டுப்பாட்டு சட்டத்தின் பிரிவு 17 இன் கீழ் மேன்மை தங்கிய நிதி அமைச்சரது முன்கூட்டிய அனுமதியை பெறல் வேண்டும

பின்வரும் முதலீட்டு வரையறை மற்றும் வர்த்தமானியில் கூறப்பட்டிருக்கும் நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அரச வர்த்தமானியில் 01.01.2011 இல் 1686/50 இன் கீழ் இலங்கையில் வாழும் நபர் இவளிநாட்டிலிருக்கும் கம்பனியின் பங்குகளிலும் மற்றும் வெளிநாட்டு அரசாங்கம் மற்றும் வெளிநாட்டு அரசாங்க அமைப்புக்களினாலும் வெளியிடப்படும் அரசாங்க முறிகளின் மீது வெளியிடுவதற்கு மேன்மை தங்கிய நிதி அமைச்சரினால் பொதுவான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  • கொழும்பு இருப்பு பரிமாற்றத்தில் (CSE) பட்டியலிடப்பட்ட கம்பனிகளிற்கு வருடத்திற்கு USD 500,000 வரை
  • கொழும்பு இருப்பு பரிமாற்றத்தில் பட்டியலிடப்படாத USD 100,000 வரை
  • கூட்டு வியாபாரத்திற்கு அல்லது தனிநபருக்கு வாழ்க்கை காலத்துக்கு USD 100,000 வரை

தனிநபர் முதலீட்டு வரையறைக்குட்பட்ட கம்பனிகளின் ஊழியர் பங்கு விருப்புத் திட்டத்தில் (ESOS) பங்கு பெறுவதற்காக அக் கம்பனிகள் தாம் வெளியிடும் பங்குகளில் 5% ற்கு குறைவான பங்குகளில் அவர்களுடைய இலங்கை ஊழியர்களை முதலீடு செய்ய வழி வகுத்துள்ளது.

எனினும், கீழ் காணும் பிரிவிற்கு கீழ்வரும் இலங்கையில் வதிவோர் அமைச்சரினால் வழங்கப்படும் வர்த்தமானியின் படி முதலீடு செய்ய தகுதியற்றவர்கள்.

  • உத்தரவாதத்தினால் வரையறுக்கப்பட்ட கம்பனிகள்
  • அரச சார்பற்ற நிறுவனங்கள் (NGO)
  • செலாவணி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் வழக்கு நிலுவையிலிருக்கும் தனிநபர், கம்பனி அல்லது கூட்டு வியாபாரம்.

மேலே குறிப்பிட்ட வரையறைகளை மீற தேவையேற்படும் தனிநபர்கள் அல்லது கம்பனிகள், மேன்மை தங்கிய நிதி அமைச்சரிடம் இருந்து அனுமதியை பெறுவதற்கு வழிகாட்டுதல்கள் மற்றும் முதலீட்டு சரிபார்த்தல் பட்டியலில் குறிப்பிடப்பட்ட ஆவணங்களை விண்ணப்பத்துடன் செலாவணி கட்டுப்பாட்டாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

வெளிமுக முதலீட்டு கணக்கு (OIA), இன் ஊடாகவே பங்குகளிலும் அரச பத்திரிகைகளிலும் முதலீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இக் கணக்கு உரிமம் அளிக்கப்பட்ட வர்த்தக வங்கிகளில் உள்நாட்டு வங்கித்தொழில் பிரிவில் திறந்து பேணப்பட முடியும். வெளிநாட்டிற்கு மாற்றி அனுப்பப்பட்ட ரூபாய்கள் OIA கணக்கில் முதலீடு ஒன்றையும் மேற்கொள்ளாமல் தக்கவைக்க முடியாது.

உசாத்துணை:

 
இலங்கையிலுள்ள கம்பனிகள் வெளிநாட்டில் அலுவலகங்களை அமைப்பதற்கு

அரச வர்த்தமானி 01.01.2011 இல. 1686/52 ற்கு அமைய அதில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்குட்பட்டு கம்பனிச் சட்டம் 2007, 7ம் இலக்கத்தின் கீழ் பதியப்பட்ட எந்தவொரு கம்பனிகளும் வெளிநாட்டில் வாழும் ஒருவருக்கு வெளிநாட்டில் கிளைகள், இணக்கம், சந்தைப்படுத்தல், பிரதிநிதித்துவ ஸ்தாபனம், திட்டங்கள், பிரதிநிதிகள் அல்லது வெளிநாட்டு அலுவலகங்களை அமைத்து அதை பேணுவதற்கான கொடுப்பனவுகளை அனுப்புவதற்கான பொதுவான அனுமதி செலாவணி கட்டுப்பாட்டாளரினால் வழங்கப்பட்டுள்ளது.

இவ் நோக்கத்திற்கான கொடுப்பனவுகள் USD 100,000 அல்லது அதற்கு சமனான வேறு குறிப்பிட்ட வெளிநாட்டு நாணயங்களை விட கூட கூடாது. அனுமதி அளிக்கப்பட்ட வர்த்தக வங்கிகளில் உள்ள உள்நாட்டு வங்கித்தொழில் பிரிவில் ஆரம்பிக்கப்பட்ட வெளிமுக முதலீட்டு கணக்கு (OIA) ஊடாகவே அனுப்பல் வேண்டும்.

உசாத்துணை: